மொரீசியஸ் காளி கோயிலுக்கு மாமல்லபுரம் சிலைகள்

Subscribe to Oneindia Tamil

மாமல்லபுரம்:

மொரீசியஸ் நாட்டில் கட்டப்பட்டுள்ள காளி கோவிலுக்கு மாமல்லபுரத்தில் வெண்கல சிலைகள் செய்யப்பட்டு, கப்பலில் அனுப்பிவைக்கப்பட்டன.

மொரீசியஸ் வாழ் தமிழர்கள் அங்குள்ள சிபேல் என்ற இடத்தில் காளி கோவில் ஒன்றை ரூ. 70 லட்சம் செலவில் கட்டியுள்ளனர். ஆகமவிதிகளின்படி 5 நிலையில் கோபுரங்களை நிர்மாணித்து கோவிலை சிறப்பாக கட்டி முடித்துள்ளனர்.

இக் கோவிலின் விழாக் காலங்களில் பக்தர்கள் தரிசனத்துக்கான உற்சவ மூர்த்திகளின் சிலைகளை வெண்கலத்தில் செய்ய முடிவு செய்தனர்.

இந்த சிலைகளை உருவாக்கும் பணி மாமல்லபுரத்தில் உள்ள நவஜீவன் உலோக சிற்பக்கலைக் கூடத்திடம் வழங்கப்பட்டது. ஸ்தபதிரவீந்திரன் தலைமையிலான சிற்பிகள் இந்த சிலைகளை வடிவமைத்தனர்.

ஸ்பதி ரவீந்திரன் இதற்கு முன் மலேசியா, ஜெர்மன், தாய்லாந்து, இலங்கை, பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளில் உள்ள கோவில்களுக்கும்பஞ்சலோக சிலைகளை வடிவமைத்து கொடுத்துள்ளார்.

அவரது தலைமையில் 12 சிற்பக் கலைஞர்கள் 5 மாதம் உழைத்து, 3 அடி உயரமுள்ள 120 கிலோ எடை கொண்ட காளி சிலை, 3 அடிஉயரமுள்ள வள்ளி, தெய்வாணையுடன் கூடிய முருகன் சிலை மற்றும் 12 அடி உயரமுடைய 100 கிலோ எடையில் கொடி மரம், 3 அடிகொண்ட விநாயகர் சிலை, கோவில் மணி ஆகியவற்றை வெண்கலத்தில் செய்து முடித்தனர்.

மொரீசியஸ் நாட்டின் தட்ப வெப்ப சூழ்நிலைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வெண்கல சென்னையில் இருந்து கப்பல் மூலம்கொண்டு செல்லப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+