பழனி பஞ்சாமிர்தத்தின் தரம் உயர்கிறது
Subscribe to Oneindia Tamil
பழனி:
பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தத்தின் சுவையையும், தரத்தையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் மிகப் பிரசித்தி பெற்றது.பழனி என்றாலே பஞ்சாமிர்தம்தான் ஞாபகத்திற்கு வரும்.
இந்த பஞ்சாமிர்தத்தின் சுவை மற்றும் தரத்தை அதிகக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இது குறித்து மைசூரில் உள்ள மத்திய உணவுஆராயாச்சி மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளை வரவழைத்து ஆலோசனை கேட்டது கோவில் நிர்வாகம்.
பஞ்சாமிர்தத்தின் தரத்தை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அதை அதிகரிக்க சில யோசனைகளைத் தெரிவித்துள்ளனர். இவற்றை பின்பற்ற பழனிகோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மேலும், பிளாஸ்டிக் டின்களில் பஞ்சாமிர்தத்தைக் கொடுக்கும் முறையை மாற்றி பாலிதீன் பைகளில் கொடுக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications