இலங்கை: விடுதலையான 15 மீனவர்கள் இன்று வருகை

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

இலங்கை கடற்படையினரால் கடத்திச் செல்லப்பட்ட 20 மீனவர்களில் 15 பேர் மட்டும் இன்று மாலை ராமேஸ்வரம் திரும்ப உள்ளனர்.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 20 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சமீபத்தில் கடத்திச் சென்றனர். இவர்களில் 15 பேர்விடுவிக்கப்பட்டுள்ளனர். மற்ற 5 பேரும் இலங்கை மன்னார் மாவட்ட நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

விடுவிக்கப்பட்ட 15 பேரும் இன்று மாலை இலங்கைக் கடற்படையினரால் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். பின்னர்அவர்கள் ராமேஸ்வரம் அழைத்து வரப்படுவர்.

இந் நிலையில் கடத்தப்பட்ட அனைத்து மீனவர்களையும் பத்திரமாக மீட்கக் கோரி கடந்த 4 நாட்களாக ராமேஸ்வரம் மீனவர்கள்காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக நேற்று முதல் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டனம்,கோட்டைப்பட்டனம் மீனவர்களும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர்.

இதையடுத்து ராமேஸ்வரம் பகுதி மீனவர்களுடன் மாநில அரசின் மீன்வளத்துறை, கடல் படை மற்றும் கடலோரக் காவல்படை அதிகாரிகள்இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

ராமேஸ்வரம் மீனவர்களின் போராட்டம் காரணமாக தமிழக அரசுக்கு இதுவரை ரூ. 7 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.மீன் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலை நிறுத்தத்தைக் கைவிடச் செய்ய தமிழக அரசின் மீன்வளத்துறை இயக்குனர், கடலோரக் காவல்படை மற்றும் கடற்படைஅதிகாரிகள் அடங்கிய குழு இன்று ராமேஸ்வரத்தில் மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள 5 மீனவர்களையும் மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் மீனவர்களிடம் அதிகாரிகள்தெரிவித்தனர். இருப்பினும் கடத்தப்பட்ட அனைவரும் பத்திரமாக திரும்பி வரும் வரை போராட்டத்தை விலக்கப் போவதில்லை என்றுமீனவர்கள் கூறிவிட்டனர்.

அவர்களுடன் தொடர்ந்து பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+