நீதியே வெல்லும்- வைகோ உற்சாகம்
கோவை:
தன் மீதான பொடா வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதன் மூலம், நீதியே வெல்லும் என்பது மீண்டும் ஒரு முறைஉறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
வைகோ உள்ளிட்ட 9 மதிமுகவினர் மீது பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது. இதுகுறித்து கோவையில் இருந்த வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில்,
என் மீதும், மதிமுக மீதும் கொண்ட வஞ்சத்தைத் தீர்க்க அரசியல்ரீதியாக இந்த வழக்கு அதிமுக அரசால் போடப்பட்டது. பொடா மறுஆய்வுக் குழு தலைவர் நீதிபதி சஹார்யா பதவி விலகியுள்ளது வருத்தம் தருகிறது. அவருக்கு ஜெயலலிதா அரசு ஒத்துழைப்பே தரவில்லை.
நீதி வெல்லும், நீதித்துறை மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அதையே வலியுறுத்துகிறது. நிச்சயம் இந்தவழக்கிலிருந்து நாங்கள் வெளியே வருவோம் என்றார் வைகோ.
மதிமுக மாநாட்டில் வி.பி.சிங்:
இந் நிலையில் மதிமுகவின் கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்ட இரண்டு நாள் மாநாடு இன்று காலை பல்லடத்தில் தொடங்கியது.
வைகோ தலைமையில் நடக்கும் இந்த மாநாட்டில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் கலந்து கொண்டார். இன்றிரவு மாநாட்டு உரை நிகழ்த்தஇருந்தார் சிங். ஆனால், அவரது பயணத் திட்டத்தில் திடீர் மாறுதல் செய்யப்பட்டது. இன்று காலை விமானம் மூலம் கோவை வந்த அவர்,காரில் பல்லடம் வந்து மாநாட்டில் பங்கேற்றார்.
பல்வேறு கருத்தரங்குகள், நாட்டுப்புற இசை, விவசாயிகளுடனான கலந்துரையாடல் ஆகியவை இம் மாநாட்டில் நடக்கின்றன. நாளைவைகோ மாநாட்டு உரையாற்றுகிறார்.












Click it and Unblock the Notifications