100 பவுன் நகை மோசடி செய்த பெண் கைது

Subscribe to Oneindia Tamil

வேலூர்:

வேலூரில் 100 பவுன் நகை மற்றும் ரூ. 20,000 பணத்தை மோசடி செய்ய முயன்ற போலி பெண் சாமியாரை போலீஸார் கைது செய்தனர்.

வேலூர் சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜீவா. இவருக்கு குடும்பத்தில் சில பிரச்சினைகள் இருந்துள்ளன. இதை தனது வீட்டுக்குஅருகில் வசித்து வந்த வரலட்சுமி என்ற பெண்ணிடம் கூறியுள்ளார் ஜீவா.

அப்போது, ஜீவாவின் வீட்டில் நிறைய நகைகள் இருப்பதை அறிந்து கொண்ட வரலட்சுமி, அவற்றை அபகரிக்கத் திட்டமிட்டார்.இதையடுத்து, தனக்கு சாமி வரும் என்றும், தனக்கு சிறப்பு சக்தி உள்ளதாகவும் கூறிய வரலட்சுமு, சிறப்புப் பூஜை செய்து குடும்பத்தின்பிரச்சனைகளை தீர்த்து வைப்பதாக ஜீவாவிடம் கூறியுள்ளார்.

இந்த சிறப்புப் பூஜையில் வீட்டில் உள்ள தங்கத்தை எல்லாம் கொண்டு வந்து வைத்து பூஜிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதை நம்பியஜீவா தனது வீட்டில் இருந்த 100 பவுன் நகைகளை வரலட்சுமியிடம் கொடுத்துள்ளார். மேலும் பூஜை செலவுக்காக ரூ. 20,000 பணத்தையும்கொடுத்துள்ளார்.

இவற்றை தனது வீட்டில் பூஜையில் வைத்து விட்டுக் கூப்பிடுவதாக கூறிவிட்டுச் சென்றார் வரலட்சுமி.

நீண்ட நேரமாக வரலட்சுமி வராததால், அவரைத் தேடி கொண்டு அவரது வீட்டுக்குப் போனார் ஜீவா. ஆனால் வரலட்சுமிதலைமறைவாகிவிட்டார்.

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜீவா உடனே சத்துவாச்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தா. போலீஸார்உடனடியாக களத்தில் இறங்கி பஸ் நிலையத்தில் நின்றிருந்த வரலட்சுமியையும் உடனே பிடித்தனர்.

அவரைக் கைது செய்து நகை, பணத்தை மீட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+