நீதிபதி மோகன் விவகாரம்: பிசிசிஐ சமாளிப்பு
மும்பை:
மும்பை கிரிக்கெட் வாரிய அலுவலகத்திற்கு நீதிபதி மோகன் வந்தபோது அலுவலகம் மூடப்பட்டிருந்ததால்எழுந்துள்ள சர்ச்சைக்கு கிரிக்கெட் வாரியம் விளக்கமளித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரிய புதிய நிர்வாகிகள் செயல்படுவதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ள சென்னைஉயர்நீதிமன்றம், மறு உத்தரவு வரும் வரை நீதிபதி எஸ்.மோகன், கிரிக்கெட் வாரிய நிர்வாகியாக செயல்படுவார்என உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து இடைக்கால நிர்வாகியாகப் பொறுப்பேற்பதற்காக நீதிபதி மோகன் மும்பையில் உள்ள இந்தியகிரிக்கெட் வாரிய தலைமை அலுவலகத்திற்குச் சென்றார். ஆனால் அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்துகிரிக்கெட் வாரிய அதிகாரிகளுடன் அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது, அலுவலகம்திறக்கப்படும் என்று தகவல் கொடுத்தனர்.
இதனால் வாசலிலேயே மோகன் காத்துக் கொண்டிருந்தார். ஆனால் நீண்ட நேரமாகியும், கிரிக்கெட் வாரியத்தைச்சேர்ந்த யாரும் வரவில்லை. இதனால் வெறுத்துப் போன மோகன் அங்கிருந்து கிளம்பினார்.
அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடம் மோகன் பேசுகையில், காலை 11.45 மணிக்கு நான் இங்கு வந்தேன்.அலுவலகம் திறக்கப்படும் என எனக்குத் தெவிக்கப்பட்டது. ஆனால் யாரும் வரவில்லை. சனிக்கிழமையன்றுகாலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அலுவலகம் செயல்படும் என வாரிய வாசலில் போர்டு ஒன்றுஉள்ளது.
ஆனால் இவ்வளவு நேரமாகியும் அலுவலகம் திறக்கப்படவில்லை என்பதைப் பார்க்கும்போது, வேண்டும் என்றேஎன்னை வெளியில் நிறுத்தி வைக்க வேண்டும் என்று வாரிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக கருதுகிறேன்.எனவே நான் இப்போது மீண்டும் சென்னை செல்ல வேண்டிய நிலையில் உள்ளேன்.
சென்னை சென்றதும், வாரிய இடைக்கால நிர்வாகியாக என்னைப் பொறுப்பேற்க கிரிக்கெட் வாரிய அதிகாரிகள்அனுமதிக்கவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் அறிக்கை கொடுப்பேன் என்றார் மோகன். பின்னர் அங்கிருந்துஅவர் கிளம்பிச் சென்றார்.
இதற்கிடையே, நீதிபதி மோகனை அவமானப்படுத்தும் வகையில் வேண்டும் என்றே அலுவலகம்பூட்டப்படவில்லை என்று கிரிக்கெட் வாரிய பொதுச் செயலாளர் எஸ்.கே.நாயர் கூறியுள்ளார். இதுகுறித்துசெய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,
வேண்டும் என்றே அலுவலகம் பூட்டப்படவில்லை. வாரிய அலுவலர்களுக்கு செப்டம்பர் 27ம் தேதி விநாயகர்சதுர்த்தி தின விடுமுறை அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அன்று விடுமுறை அளிக்கப்படவில்லை. எனவேசனிக்கிழமை விடுமுறை விடப்பட்டிருந்தது.
நீதிபதி மோகன் நியமனம் மற்றும் வருகை குறித்து எங்களுக்கு எந்தத் தகவலும் இல்லை. பத்திரிக்கைகளில்படித்துத்தான் தெரிந்து கொண்டோம் என்றார்.
நீதிபதி மோகனுக்கு ஏற்பட்ட அதே நிலை இந்திய, ஆஸ்திரேலியா கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் நடுவர் ரஞ்சன்மதுகல்லேவுக்கும் ஏற்பட்டது. பெங்களூரில் இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையே டெஸ்ட் போட்டிநடந்து வருகிறது.
இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணியின் முன்னணி வீரர் வீரேந்திர ஷேவாக்எல்.பி.டபிள்யூ முறையில் மெக்ராத் பந்தில் அவுட் ஆனார். ஆனால் இந்த அவுட் குறித்து அதிருப்தி அடைந்தஷேவாக், போட்டி நடுவரான ரஞ்சன் மதுகல்லேவிடம் புகார் கொடுத்தார்.
இதுகுறித்து ஷேவாக்கின் குறைகளைக் கேட்ட மதுகல்லே பிற நடுவர்களுடனும் விவாதித்தார். பின்னர் தனதுமுடிவை அறிவிக்க இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரிகளை தேடினார். ஆனால் ஒருவர் கூட அவருக்குக்கிடைக்கவில்லை. இதனால் குழப்பமடைந்த அவர் கிரிக்கெட் வாரிய அலுவலகத்திற்குப் போன் செய்து பார்த்தார்.அங்கும் யாரும் எடுக்கவில்லை.
இதனால் வெறுத்தப் போன அவர் தனது முடிவை இப்போது அறிவிக்கப் போவதில்லை. திங்கள்கிழமையன்று(நாளை) எனது முடிவை அறிவிப்பேன் என்று விரக்தியுடன் தெரிவித்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications