தூத்துக்குடி திமுக செயலாளரின் சொத்துகள் முடக்கம்
தூத்துக்குடி:
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் என்.பெரியசாமியின்சொத்துகளை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புப்போலீஸார் பதிவு செய்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
வழக்கில் பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு குற்றப் பத்திரிக்கை நகல்களும் வழங்கப்பட்டுவிட்டன.இந் நிலையில் வழக்கு முடியும் வரை பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினரது சொத்துகளை முடக்கி வைக்கவேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட அரசு சிறப்பு வழக்கறிஞர் நட்டர்ஜி நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல்செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கோபால், பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினரின் ரூ.2.36 கோடிமதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை வரும் 26-ம் தேதி வரை விற்கவோ, உரிமம் மாற்றவோ,அழிக்கவோ கூடாது என்று உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு காரணமாக பெரியசாமியின் 12 வாகனங்கள் உள்பட 32 சொத்துகள் முடக்கப்பட்டன.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications