கடலூர் ஜமுகூ கூட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுப்பு
கடலூர்:
கடலூரில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் நாளை நடைபெறுவதாக இருந்த கண்டன பொதுக்கூட்டத்திற்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.
பாமகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்த, குறிஞ்சிப்பாடியை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் வெங்கடேசன்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக பண்ருட்டி தொகுதி பாமக எம்.எல்.ஏ. வேல்முருகன் உள்பட9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் வேல்முருகனை கைது செய்யவும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதைக் கண்டித்து நாளை கடலூர்மஞ்சகுப்பம் மைதானத்தில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடுசெய்யப்பட்டு இருந்தது.
கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிசெயலாளர் வரதராஜன், திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பேசுவதாகஇருந்தது.
இந் நிலையில் கூட்டம் நடத்த காவல்துறை மறுத்துள்ளது. இது குறித்து காவல்துறை துணை கண்காணிப்பாளர்பெரோஸ்கான் அப்துல்லா நிருபர்களிடம் கூறியதாவது:
வெங்கடேசன் கொலை வழக்கில் வேல்முருகன் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இக்கொலையில்தொடர்புள்ளவர்கள் தலைமறைவாக இருப்பதால் கடலூர் மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படும் நிலைமைஉள்ளதாக புலனாய்வு துறை தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் எனது உட்கோட்டத்தில் 5 பேருக்கு மேல் பொதுக்கூட்டம். ஊர்வலம் நடத்த கடந்த மாதம் 28ம் தேதி முதல்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுத்துள்ளோம் என்றுகூறினார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications