அஸ்ஸாமில் வெள்ளப்பெருக்கு: 119 பேர் பலி
கெளகாத்தி:
அஸ்ஸாம் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 119 பலியாகினர். ஹெலிகாப்டர்கள் மூலம்மீட்புபணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
அஸ்ஸாம் மாநிலம் கோல்பாரா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாகவெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது.
இந்த கிராமங்களில் அனைத்து வீடுகளும் இடிந்து நாசமாயின. கோல்பாரா மாவட்டத்தில் மட்டும் வெள்ளப்பெருக்கில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 119 ஆகியுள்ளது. இதுவரை 64 பிணங்கள் மீட்கப்பட்டன.
ருத்னோய், கோல்பாரா பகுதிகளில் 20,000க்கும் அதிகமானோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டார்கள்.
மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட காலி சாமாரி, நாராயண்பூர், சண்டமாரி, ஹரிதானந்த்டலக், புதிமாகி, பகர்கதாஆகிய கிராமங்களில் வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை மீட்கும் பணியில் ராணுவ ஹெலிகாப்டர்கள் தீவிரமாகஈடுபட்டுள்ளன. இதுவரை 25 பேர் ஹெலிகாப்டர்கள் மூலம் காப்பற்றப்பட்டுள்ளனர்.
தற்போது வெள்ளப்பெருக்கு குறைந்து விட்டது. இந்த கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக அஸ்ஸாமில்தொலைபேசி வசதியும், ரயில் போக்குவரத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டது. கெளகாத்தியில் ஏற்பட்ட நிலச்சரிவில்17 பேர் பலியாகி உள்ளனர்.


Click it and Unblock the Notifications
