பிசிசிஐ: நீதிபதி மோகன் நியமனத்திற்கு நீதிமன்ற தடை
டெல்லி & சென்னை:
நீதிபதி மோகன் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால நிர்வாகியாக நியமித்து சென்னை உயர் நீதிமன்றம்பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு நடந்த தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் செயல்படுவதற்குசென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. மேலும் இடைக்கால நிர்வாகியாக ஓய்வு பெற்ற நீதிபதிஎஸ்.மோகனை நியமித்தது.
இதை எதிர்த்து கிரிக்கெட் வாரியம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம்,நீதிபதி மோகன் நியமனத்திற்கும் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகியாக (Patron-in-Chief ) ஜக்மோகன்டால்மியா நியமிக்கப்பட்டதற்கும் இடைக்கால தடை விதித்தது.
இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு டெல்லி கிரிக்கெட்வாரியத்திற்கு உத்தரவிட்டது. அதோடு வழக்கை வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
28ம் தேதி விசாரணையின் போது, கிரிக்கெட் வாரியத் தேர்தலில் முறையாக நடத்தப்படவில்லை என்பதுதெரியவந்தால், மீண்டும் புதிதாக தேர்தல் நடத்த உத்தரவிடப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
மோகன் அறிக்கை தாக்கல்:
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால நிர்வாகியாக தான் பொறுப்பேற்க முடியாதது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்துள்ளார் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.மோகன்.
இதைத் தொடர்ந்து மும்பையில் உள்ள கிரிக்கெட் வாரிய அலுவலகத்திற்கு மோகன் பொறுப்பேற்பதற்காகச்சென்றார். ஆனால் அலுவலகம் மூடப்பட்டிருந்தது. இதனால் அவர் இடைக்கால நிர்வாகியாகப் பொறுப்பேற்கமுடியாமல் சென்னை திரும்பினார்.
தான் கிக்கெட் வாரிய இடைக்கால நிர்வாகியாகப் பொறுப்பேற்க முடியாமல் போனது குறித்து விரிவானஅறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வேன் என்று மோகன் கூறியிருந்தார்.
அதன்படி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விரிவான அறிக்கை ஒன்றை அவர் தாக்கல் செய்தார். அதில் தான்இடைக்கால நிர்வாகியாகப் பொறுப்பு ஏற்க முடியாமல் போனது குறித்து விவரித்துள்ளார்.
கொல்கத்தாவில் உண்ணாவிரதம்:
இதற்கிடையே கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்கு நடந்து வருவதைக்கண்டித்து மத்திய கொல்கல்த்தா கிரிக்கெட் கிளப்பைச் சேர்ந்த 100 பேர் இன்று ஈடன் கார்டன் மைதானம் முன்பாக12 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் தங்களது வாயில் கறுப்புத் துணி கட்டியுள்ளனர். மேலும், நீதிமன்றத்தில் இருந்துகிரிக்கெட் விலகியிருக்கட்டும், மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுங்கள்; நீதிமன்ற வளாகத்தில் வேண்டாம்என்பது போன்ற வாசகங்களை எழுதி வைத்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications