இலங்கை தூதரகத்தை முற்றுகையிட மீனவர்கள் முடிவு

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்:

சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த தமிழக, புதுவைமீனவர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

ராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகப்பட்டனம், ஜெகதாப்பட்டனம், கோட்டப்பட்டனம் உள்ளிட்ட தமிழகமீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும்போது அவர்களை இலங்கை கடற்படையினர் அடிக்கடி பிடித்துச்செல்வதும், துப்பாக்கிச் சூடு நடத்துவதும், தாக்குவதும் தொடர் கதையாகி வருகிறது.

இதைக் கண்டித்து இப் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த ஒரு வாரமாக காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது.

இந் நிலையில் ராமநாதபுரத்தில் தமிழக, புதுவை மீனவர் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், வரும் 21ம் தேதி சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம்நடத்த மீனவர்கள் முடிவு செய்தனர்.

மேலும் 31ம் தேதி ஆயிரம் படகுகளில் மீனவர்கள் தங்களது குடும்பத்தினருடன் இலங்கை செல்லவும் முடிவுசெய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+