பட்டாசு கடத்த முயன்ற குவைத் ஏர்வேஸ் ஊழியர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையிலிருந்து கிளம்ப இருந்த விமானத்தில் 200 கிலோ பட்டாசுகளை ஏற்ற முயன்ற குவைத் ஏர்வேஸ்நிறுவன ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து 256 பயணிகளுடன் குவைத் ஏர்வேஸ் நிறுவன விமானம்குவைத்துக்கு கிளம்பவிருந்தது. பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏறி அமர்ந்து விட்ட பின்னர் அந்த விமானநிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்களான அப்துல் காதர், சையத் ஷா அகமது ஆகிய இருவரும் 5 சூட்கேஸ்களுடன்விமானத்தில் ஏற முயன்றனர்.

அவர்கள் விமானப் பணியாளர்கள் என்பதால் வழக்கமான விமான நிலைய சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை.ஆனால், அவர்களிடம் இருந்த 5 பெட்டிகளும் பரிசோதிக்கப்படாமல் விமானத்தில் ஏற்றப்படுவதைக் கண்டமத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். (விமான நிலையப் பாதுகாப்புஇந்தப் படையினரின் வசம் தான் உள்ளது)

பெட்டிகளை சோதனையிட வேண்டும் என படையினர் கூறியபோது, அதை ஏற்க ஊழியர்கள் இருவரும்மறுத்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆனாலும் அவர்களையும் மீறி பெட்டிகளை பாதுகாப்புப் படையினர் எக்ஸ்-ரே ஸ்கேன் செய்து பார்த்து போது,அதில் இருப்பது வெடி பொருள் என்று தெரியவந்தது.

இதையடுத்து அதில் குண்டுகள் இருக்கலாம் என்று சந்தேகமடைந்த பாதுகாப்புப் படையினர், அவற்றை விமானநிலைய வளாகத்தின் வெளியே மண்ணில் புதைக்க முடிவு செய்தனர். அப்போது தான், அதில் பட்டாசுகள்இருப்பதாக குவைத் ஏர்வேஸ் ஊழியர்கள் தெரிவித்தனர்.

ஆனாலும் அதை நம்பாத பாதுகாப்புப் படையினர், மிகுந்த எச்சரிக்கையுடன் திறந்து பார்த்தனர். அப்போது அதில்ஏராளமான பட்டாசுகள் திணிக்கப்பட்டிருந்து தெரிய வந்தது. இதையடுத்து 5 பெட்டிகளும் போலீசாரிடம்ஒப்படைக்கப்பட்டன.

இந் நிலையில் விமான நிலையத்தில் வெடிகுண்டு லைக்கப்பட்டிருப்பதாக புரளி கிளம்பிவிட்டது. இதையடுத்துமீனம்பாக்கம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து அப்துல் காதரையும், சையத் ஷாவையும் போலீசார் கைது செய்தனர். இருவருமே குவைத்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விமான நிலைய பாதுகாப்பு விதிகளை மீறியதாகவும், வெடிபொருள் சட்டத்தின் கீழும் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய துணை எஸ்.பி. சுப்பிரமணியமும், இன்ஸ்பெக்டர் குருசாமியும்நிருபர்களிடம் தெரிவித்தனர்.

தீபாவளியையொட்டி குவைத்தில் வசிக்கும் இந்தியர்களுக்கு அதிக விலைக்கு பட்டாசுகளை விற்று லாபம் ஈட்டநினைத்து இவர்கள் விதிகளை மீறி விமானத்தில் பட்டாசுகளைக் கடத்த முயன்றதாக போலீசார் தெரிவித்தனர்.இந்தக் குழப்பத்தால் சுமார் ஒரு மணி நேர தாமதத்திற்குப் பின் விமானம் குவைத் கிளம்பிச் சென்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+