ஆந்திர அரசு- நக்ஸல்கள் பேச்சு தொடக்கம்
ஹைதராபாத்:
நக்ஸலைட்களுக்கும் ஆந்திர அரசுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை இன்று தொடங்கியது.
மக்கள் யுத்தக் குழு நக்ஸலைட் அமைப்பு கடந்த 30 ஆண்டுகளாக ஆந்திர அரசையும், நிலச் சுவன்தாரர்களையும்எதிர்த்து ஆயுதப் போராட்டம் நடத்தி வருகிறது. இந் நிலையில் சந்திரபாபு நாயுடுவை அடுத்து ஆந்திரமுதல்வராகப் பொறுப்பேற்ற ராஜசேகர ரெட்டி, நக்ஸலைட்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.
பேச்சுவார்த்தைக்கு நக்ஸலைட்களும் இணங்கினர். இதனையடுத்து பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடுகள்செய்யப்பட்டன. தலைமறைவு வாழ்க்கையில் இருந்து விடுபட்டு ஹைதராபாத் வந்த நக்ஸலைட் தலைவர்கள்கடந்த 3 நாட்களாக அரசு விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் டாக்டர் எம்.சி.ஆர். எச். ஆர்.டி நிறுவனத்தில் இன்று நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு நக்ஸல்தலைவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு மாநில உள்துறை அமைச்சர் ஜன ரெட்டி தலைமையிலான 9 பேர்கொண்ட அரசு குழுவுடன் பேச்சுவார்த்தை தொடங்கியது.
பள்ளி ஆசிரியராக இருந்து மக்கள் போர்க்குழு செயலாளராக மாறிய ராமகிருஷ்ணா, ஆந்திரா- ஒரிசா பகுதிபோர்க்குழு செயலாளர் சுதாகர், வடக்கு தெலுங்கானா போர்க் குழு உறுப்பினர் கணேஷ், ஜனசக்தி தலைவர்கள்அமர் மற்றும் ரியாஸ் ஆகியோர் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சங்கரன் தலைமையில் மத்தியஸ்தர் குழுவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.பேச்சுவார்த்தை நடைபெறும் இடத்தைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நக்ஸல்- சிவபார்வதி சந்திப்பு:
முன்னதாக என்.டி.ஆர். தெலுங்கு தேச கட்சித் தலைவர் லட்சுமி சிவபார்வதி, ராமகிருஷ்ணாவை சந்தித்துப்பேசினார். அப்போது அவர், பேச்சுவார்த்தையின்போது சந்திரபாபு நாயுடுவின் சொத்துக் குவிப்பு பற்றியும்,அவரது ஆட்சியில் நடந்த ஊழல்கள் பற்றியும் விசாரணை நடத்த அரசை வற்புறுத்தும்படி கேட்டுக்கொண்டார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications