பெட்ரோல், டீசல் விலை உயராது: மத்திய அரசு
டெல்லி:
பெட்ரோல், டீசலின் விலைகளை உயர்த்துவதில்லை என மத்திய அரசு முடிவு செய்துள்து.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. இந்தியன் ஆயில்கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், இந்தோ பாரத்பெட்ரோலியம் ஆகிய இந்திய எண்ணெய் நிறுவனங்கள் இதனால் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.
இந்த நிதியாண்டில் மட்டும் இதுவரை ரூ.2,273 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந் நிலை நீடித்தால்வரும் மார்ச் வரை கூடுதலாக ரூ. 1,981 கோடி நஷ்டம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
இதனால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 1.88 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 3.30ம்அதிகரிக்குமாறு மத்திய அரசுக்கு எண்ணெய் நிறுவனங்கள் நெருக்கடி தர ஆரம்பித்துள்ளன.
இதையடுத்து பிரதமர் மன்மோகன் சிங்கும் பெட்ரோலியத்துறை அமைச்சர் மணிசங்கர் அய்யரும் ஆலோசனைநடத்தினர். அப்போது கச்சா எண்ணெய் இறக்குமதி மீதான கஸ்டம்ஸ் வரியை 15 சதவீதத்தில் இருந்து 10சதவீதமாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டது.
இதன்மூலம் பெட்ரோல், டீசலின் விலையை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதே போல சமையல் எரிவாயுவின் விலையை சிலிண்டெருக்கு ரூ. 158 உயர்த்த வேண்டிய அளவுக்கு சர்வதேசசந்தை விலைகள் உயர்ந்துள்ளன. அதே போல மண்ணெண்ணெயின் விலையையும் லிட்டருக்கு ரூ. 11 உயர்த்தவேண்டிய நிலை உள்ளது. ஆனால், இந்த இரண்டு எரிபொருள்களின் விலையையும் உயர்த்துவதில்லை எனவும்மத்திய அரசு முடிவெடுத்து.
சமையல் காசின் விலையை உயர்த்தாமல் தவிர்க்க அதன் மீதான இறக்குமதி வரியை 20 சதவீதத்தில் இருந்து 15சதவீதமாகக் குறைக்க நிதித்துறைக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications