மகாராஷ்டிரா: சோனியாவுடன் பவார் சந்திப்பு
மும்பை:
மகாராஷ்டிராவில் அடுத்து ஆட்சி அமைப்பது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார்,காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இன்று சந்தித்துப் பேசினார்.
மகாராஷ்டிராவில் கடந்த 13ம் தேதி சட்டசபைத் தேர்தலில் மொத்தமுள்ள 288 இடங்களில் ஆளும் காங்கிரஸ் -தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 139 இடங்களை பிடித்தது. 124 இடங்களில் போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ்71 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 157 இடங்களில் போட்டியிட்டு, 69 இடங்களை வென்றது.
சிவசேனா- பாஜக கூட்டணி 117 இடங்களில் வெற்றி பெற்றது.
அதிக இடங்களைப் பிடித்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைப்பற்கான நடவடிக்கைகளில்ஈடுபட்டுள்ளது. அதிக இடங்களைப் பிடித்த தங்கள் கட்சிக்கே முதல்வர் பதவியை தர வேண்டும் என்று தேசியவாதகாங்கிரஸ் கோரி வருகிறது.
இது தொடர்பாக சோனியா காந்தியுடன் சரத்பவார் இன்று டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. விரைவில் இந்தப் பிரச்சினை சுமூகமாக தீர்க்கப்படும்என்று சரத்பவார் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதற்கிடையே மகாராஷ்டிரா சட்டசபைக்கான காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் கூட்டம் இன்று காங்கிரஸ்கட்சியின் மேலிடப் பார்வையாளர்கள் பிரனாப் முகர்ஜி, குலாம் நபி ஆசாத் ஆகியோர் முன்னிலையில் மும்பையில்நடைபெறுகிறது.
கருணாநிதி வாழ்த்து:
இந் நிலையில் மகாராஷ்டிரா தேர்தலில் வெற்றி பெற்றதற்கு சோனியா காந்திக்கும், சரத் பவாருக்கும் திமுக தலைவர்கருணாநிதி தனித்தனியே வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.
-
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications