தலித்துகளுக்கு தனியார் துறையில் முன்னுரிமை: ப.சி.
சென்னை:
தலித் சமுதாயத்தினருக்கு தனியார் துறையிலும் முறையான இட ஒதுக்கீடு கிடைக்க மத்திய அரசு நடவடிக்கைஎடுக்கும் என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
திருக்குளம் சிந்தனையாளர்கள் மையம் சார்பில் தாழ்த்தப்பட்டோருக்கு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதிட்டங்கள் குறித்த சிறப்பு மாநாட்டில் கலந்து கொண்டு ப.சிதம்பரம் பேசினார்.
அப்போது, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கான சலுகைகள், திட்டங்கள் குறித்து மிகத் தீவிரமாக விவாதிக்கப்படவேண்டும். இதில் அரசியல் நுழைந்து விடக் கூடாது. அப்படி நேர்ந்தால் தலித் மக்களின் முன்னேற்றத்தைஇலக்காகக் கொண்டதன் உண்மையான நோக்கம் அடிபட்டுப் போய் விடும்.
தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு என்பது ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியின் பொது செயல் திட்டத்தில் இடம்பெற்றுள்ள ஒரு முக்கியமான திட்டம். இதுதொடர்பான தேசிய அளவிலான விவாதத்தை பிரதமர் மன்மோகன் சிங்தொடங்கியுள்ளார். இது வரவேற்கத்தக்கது.
தனியார் துறையிலும் தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க மத்திய அரசு உறுதியான முயற்சிகளை எடுக்கும்.பொதுத் துறையில் காலியாகக் கிடக்கும் தலித்துகளுக்கான பணியிடங்களை நிரப்ப முழு வீச்சில் நடவடிக்கைஎடுக்கப்படும்.
தலித்துகளுக்கு கல்விக்காக வழங்கப்படும் உதவித் தொகையை அதிகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வோம்.அதேசமயம் அவர்களுக்கு படிப்புக் கடனை அதிகக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். தலித்துகளுக்கு அதிகஅளவில் கடனுதவி செய்ய வேண்டியது அவசியம்.
பிற சமுதாயத்தினரைப் போல தலித் சமுதாயத்தினரும் அதிக அளவில் கல்வி அறக்கட்டளைகளை, கல்லூரிகளைதொடங்க முயற்சிக்க வேண்டும். இதற்கு வங்கிகள் அதிக அளவில் கடன் கொடுக்கத் தயாராக உள்ளன. தலித்துகள்அதிக அளவில் கல்வி நிறுவனங்களை தொடங்க வேண்டியது அவசியம் என நான் கருதுகிறேன் என்றார் அவர்.
-
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications