தமிழகத்திற்கு காவிரி நீர்: பெங்களூரில் மணிசங்கர்
பெங்களூர்:
காவிரிப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர்மணிசங்கர் அய்யர் கூறினார்.
பெங்களூர் அருகே சோலூரில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் காஸ் பாட்டிலிங் தொழிற்சாலையைதொடக்கிவைத்து அவர் பேசியதாவது:
நான் இங்கு காவிரிப் பிரச்சினையை பேசவிருக்கிறேன். இந்தப் பிரச்சினையை மத்திய அமைச்சராக நான்பேசவில்லை. மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி உறுப்பினராக பேச விரும்புகிறேன்.
காவிரி நடுவர்மன்றம் அமைக்கப்பட்டு 13 ஆண்டுகளாகியும் காவிரிப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாணமுடியவில்லை.
முன்பு தமிழக காவிரி டெல்டா பகுதிகளைப் பார்த்தால் பச்சைப் பசேலென இருக்கும். ஆனால் தற்போது அவைவறண்ட பகுதியாகிவிட்டது. இது மிகுந்த வருத்தமளிக்கிறது.
காவிரிப் பிரச்சினை ஏற்படும்போதுதான் காவிரி நதிநீர் ஆணையக் கூட்டம் நடைபெறுகிறது.
கர்நாடகத்தில் அணைகள் நிறைந்த பின்னர்தான் காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. ஆனால் தமிழகத்தில்விவசாயிகள் எலிக்கறி சாப்பிடும் நிலைக்கு வந்துவிட்டனர்.
காவிரிப் பிரச்சினைக்கு மனிதநேயத்துடன் நிரந்தரத் தீர்வு காணவேண்டும். இந்தியர்களாக, நண்பர்களாகஇப்பிரச்சினையை எண்ணிப் பாருங்கள். கர்நாடகத்தில் விளைந்தால் அது கர்நாடக அரிசி என்றோ, தமிழகத்தில்விளைந்தால் அது தமிழக அரிசி என்றோ கூறப் போவதில்லை. மொத்தத்தில் அது இந்தியாவின் உற்பத்தி என்றேகூறப்படும் என்றார் மணிசங்கர் அய்யர்.
-
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம்












Click it and Unblock the Notifications