கோவில் காவலாளியை கொன்று நகை கொள்ளை
கோவை:
கோயம்பத்தூர் அருகே அன்னூர் என்ற இடத்தில் கோவில் காவலாளியைக் கொன்ற கொள்ளையர்கள், கோவிலில்இருந்து உண்டியல் பணம் மற்றும் நகைகளை திருடிக் கொண்டு சென்றனர்.
அன்னூரில் மன்னீஸ்வரர் கோவில் உள்ளது. மிகவும் பழமையான இந்தக் கோவிலில் காவலாளியாக ராசப்பன்மற்றும் செல்லமுத்து ஆகியோர் வேலை பார்த்து வருகிறார்கள்.
சனிக்கிழமை இரவும் இருவரும் வழக்கம் போல பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந் நிலையில் நேற்றுகாலை 5 மணிக்கு கோவில் அர்ச்சகர்களும், சில பக்தர்களும் கோவிலுக்கு வந்துள்ளனர். அப்போது கோவிலின்ராஜகோபுரக் கதவு பூட்டப்பட்டிருந்தது.
குழப்பமடைந்த அவர்கள் கதவைத் தட்டிப் பார்த்தனர். ஆனால் திறக்கப்படவில்லை. இதையடுத்து சிலர் சுவரில்ஏறி குதித்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது காவலர் செல்லமுத்து ரத்த வெள்ளத்தில் இறந்து போய்க்கிடந்தார். அவரது கழுத்து துண்டால் நெரிக்கப்பட்டிருந்தது, உடலில் கத்திக் குத்துக் காயங்களும் காணப்பட்டன.
இன்னொரு காவலாளியான ராசப்பன் கை, கால் கட்டப்பட்டு கிடந்தார். அவரது வாய் துணியால்மூடப்பட்டிருந்தது. பதறிப் போன அர்ச்சகர்களும், பக்தர்களும் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர்.
போலீஸார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். கோவில் வளாகத்தில் உள்ள அருந்தவச் செல்விஅம்மன் சன்னதியின் கதவு உடைக்கப்பட்டு அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த வெள்ளிக் கவசம், 45பவுன் தங்கநகைகள், வைர மூக்குத்தி உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை போயிருந்தன. மேலும், உண்டியலும் உடைக்கப்பட்டுபணம் திருடப்பட்டிருந்தது.
மொத்தம் ரூ. 3.5 லட்சம் மதிப்புள்ள நகை, பொருட்கள் திருடு போயுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த துணிகரகொலை மற்றும் கொள்ளை குறித்து போலீஸார் தீவிர விசாரைண நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications