கும்பகோணம்: குழந்தைகளிடம் நீதிபதி விசாரணை
தஞ்சாவூர் :
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் காயம் அடைந்த பள்ளிக்குழந்தை 35 பேரிடம் நீதிபதி சம்பத் விசாரணைநடத்தினார்.
கும்பகோணம் கிருஷ்ணா பள்ளியில் ஏற்பட்ட கொடூரமான தீ விபத்தில் 94 குழந்தைகள் பலியாயினர். இச்சம்பவம்தொடர்பாக பள்ளி நிர்வாகிகள், கல்வித்துறை அதிகாரிகள் 18 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில்விடுவிக்கப்பட்டனர்.
தீ விபத்து தொடர்பாக விசாரிக்க நீதிபதி சம்பத் தலைமையில் விசாரணை கமிஷனை தமிழக அரசு அமைத்தது.
இந் நிலையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக நீதிமன்றத்தில்நீதிபதி சம்பத் தலைமையில் விசாரணை நடந்தது. தீயில் காயமடைந்த குழந்தைகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள்உட்பட 35 பேர் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
விசாரணையின் போது மாவட்ட ஆட்சித் தலைவர் ராதாகிருஷ்ணன் உடனிருந்தார். தொடர்ந்து 5 நாட்களுக்கு 180பேரிடம் விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications