வீரப்பன் சாவு: பொதுமக்கள் பரம திருப்தி
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து பொது மக்களிடையே மகிழ்ச்சி நிலவுகிறது. சிலர் மட்டுமே அவன் உயிருடன் பிடிபட்டிருக்க வேண்டும் என்று கருத்து தெரிவிக்கின்றனர். பெரும்பாலானவர்கள் அவனைப் போட்டுத் தள்ளிதே சரி என்கின்றனர்.
வீரப்பனின் எண்கெளன்டர் சாவு தமிழகம், கர்நாடகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாராலும் பிடிக்கவே முடியாத மாயாவி என்று கருதப்பட்ட வீரப்பனை படு தில்லான முறையில் வெளியே வர வைத்து அதிரடிப்படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளது பொது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஜெயலட்சுமியால் நாறிக் கொண்டிருக்கும் காவல்துறையின் பெயரை ஓரளவுக்கு காப்பாற்ற இந்த சாவு நிச்சயம் உதவும் என்றே தெரிகிறது.
தலைநகர் சென்னையில் ஆரம்பித்து மாநிலத்தின் தட்டு முட்டு சந்து பொந்து வரை ஒரே வீரப்பன் புராணம் தான் கேட்கிறது. பெரும்பாலான குரல்களில் மகிழ்ச்சி தான் தெரிகிறது. ஒரு வழியாக வீரப்பன் ஒழிஞ்சான் என்ற நிம்மதிப் பெருமூச்சை பார்க்க முடிகிறது.
ஆயுதம் எடுத்தவன் ஆயுதத்தாலேயே அழிந்தான் என்று சொல்லும் பொதுமக்களுக்கு மத்தியிலேயே சிறுபான்மையாக வீரப்பனுக்கு ஆதரவான குரலும் ஆங்காங்கே கேட்கிறது.
அவனைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தியிருக்க வேண்டும், உயிர்ை பறிக்க இவர்கள் யார் என்று போலீஸ் மீது இந்தக் குரல்கள் பாய்கின்றன. மேலும் அரசியல்வாதிகள் குறித்த பல உண்மைகளை வீரப்பன் சொல்லி விடுவான் என்று பயந்தே அவன் கதையை ஆம்புலன்சில் முடித்துவிட்டார்கள் என்கிறார்கள் இவர்கள்.
பூலான் தேவிக்குக் கொடுக்கப்பட்டதைப் போல வீரப்பனுக்கும் பொது மன்னிப்பு வழங்கியிருக்கலாம் என்றார்கள்.
எப்படியோ, வீரப்பனை வைத்து இனிமேல் அரசியல் நடத்தும் வாய்ப்பை நம் ஊர் அரசியல்வாதிகள் இழந்து விட்டார்கள்.
முண்டியடித்த அதிரடிப்படையினர்:
வீரப்பனின் உடலைப் பார்க்க தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அதிரடிப்படை வீரர்கள் சாரை, சாரையாய் வந்து கொண்டிருக்கின்றனர். இவனைப் பிடிக்கத் தான் இந்த பாடுபட்டோமா என்ற எரிச்சலுடன், இவன் தானா அவன் என்ற ஆர்வத்துடனும் வந்து பார்த்துவிட்டுச் செல்கின்றனர்.
இதனால் இன்று காலை முதல் அதிரடிப்படை முகாம்களைச் சேர்ந்த வாகனங்கள் காட்டுப் பகுதிக்கும், தர்மபுரி மருத்துவனைக்குமாக ஷன்டிங் அடித்துக் கொண்டிருந்தன.












Click it and Unblock the Notifications