கொல்லப்பட்டானா? வேனுக்குள் தற்கொலையா?
தர்மபுரி:
போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்ட வீரப்பன் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் பேசப்படுகிறது.
தன்னை அதிரடிப்படையினர் சுற்றி வளைத்ததும் முதலில் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்ப நினைத்த வீரப்பன், அதுமுடியாமல் போகவே தன்னைத் தானே சுட்டுக் கொண்டிருக்கலாம் என காட்டுப் பகுதி கிராமத்தினர் கூறுகின்றனர்.
ஆனால், இதை அதிரடிப்படை மறுக்கிறது. தாங்கள் நடத்திய தாக்குதலில் தான் அவன் இறந்தான் என்கிறது.
மினி சுற்றுலா தலமான பாடி!
இதற்கிடையே வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட பாடி மலைக் கிராமப் பகுதிக்கு கூட்டம் கூட்டமாக கிராம மக்கள்வந்தவண்ணம் உள்ளனர். இதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த இடம் ஒரே நாளில்சுற்றுலா தலம் போல மாறி விட்டது.
வீரப்பன் இங்குதான் சுட்டுக் கொல்லப்பட்டான் என்பதையே மக்களால் நம்ப முடியவில்லை. மிகவும்ஆச்சரியத்துடனும் சம்பவம் நடந்த இடத்தைப் பார்த்துவிட்டு வீரப்பன் குறித்து தங்களுக்குத் தெரிந்தவிவரங்களை சிலாகித்த வண்ணம் உள்ளனர்.
இதனால் இப் பகுதியில் உள்ள சாயா கடைகளில் ஜோரான வியாபாரம் நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications