படையினருக்கு ஜெ. பாராட்டு விழா, விருந்து
சென்னை:வீரப்பனையும், அவனது கும்பலையும் சுட்டுக் கொன்ற தமிழக சிறப்பு அதிரடிப் படையைச் சேர்ந்த 752 பேருக்கும்சென்னையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் பாராட்டு விழா நடக்கிறது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வீரப்பனை சுட்டுக் கொன்ற அதிரடிப்படை வீரர்கள், அதிகாரிகள் 752 பேருக்கும் சென்னையில் வரும் 27ம் தேதிபாராட்டு விழா நடத்தப்படவுள்ளது.
நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த விழாவுக்கு முதல்வர் ஜெயலலிதா முன்னிலை வகிக்கிறார்.இதில், அதிரடிப்படை வீரர்களின் குடும்பத்தினரும் கலந்து கொள்வார்கள்.
இந் நிகழ்ச்சியின்போது, 752 பேருக்கும் பதவி உயர்வுக்கான ஆணை, ரூ. 3 லட்சம் பரிசு, விரும்பும் இடத்தில்வீட்டு மனைகளுக்கான உத்தரவு ஆகியவற்றுறை ஜெயலலிதா வழங்குவார்.
பின்னர் முதல்வர் 752 பேரின் குடும்பத்தினருக்கும் விருந்து வழங்குவார் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications