ராஜ்குமார் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

Rajkumar family distributes sweetsவீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டதால், இனி சொந்த ஊரான தொட்டகாஜனூருக்கு பயமின்றிச் செல்லலாம்என்று கன்னட நடிகர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

வீரப்பன் பிடியில் 3 மாதங்களாக இருந்த கன்னட நடிகர் ராஜ்குமார், வீரப்பன் சாவு குறித்து நிம்மதிதெரிவித்துள்ளார். வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட தகவலையடுத்து ராஜ்குமார் குடும்பத்தினர் இனிப்பு வழங்கிகொண்டாடினர்.

பின்னர் ராஜ்குமார் கூறுகையில், இது நிம்மதி தரும் செய்தி. இனிமேல் எனது சொந்த ஊரான தொட்டகாஜனூருக்கு(ராஜ்குமாரின் சொந்த கிராமம், இங்கிருந்துதான் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திச்சென்றான்) பயமின்றி செல்லலாம்என்றார்.

அதேசமயம், வீரப்பன் செத்தால் என்ன, எனது கணவர் திரும்பி வரவாப் போகிறார் என்று வீரப்பன் காட்டில்மர்மமான முறையில் கொல்லப்பட்ட முன்னாள் அமைச்சர் நாகப்பாவின் மனைவி பரிமளா சோகத்துடன்கேட்டுள்ளார்.

வீரப்பன் சாவு குறித்து அவர் கருத்து கூறுகையில், இது ஒரு மோசமான மனிதனின் முடிவு. இதனால் நான்சந்தோஷப்படுவதற்கு எதுவும் இல்லை. எனது கணவர் திரும்பி வரப் போவதில்லை.

வீரப்பன் கொல்லப்பட்டதன் மூலம் பாதி நீதிதான் கிடைத்துள்ளது. எனது கணவரை கொன்றவர்கள் யார் என்பதுகண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட்டால்தான் முழு நியாயம் கிடைத்ததாக நான் உணர்வேன் என்றார்பரிமளா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+