அதிரடிப்படை தொடர்ந்து செயல்படும்: ஷீலா ராணி

Subscribe to Oneindia Tamil

சத்யமங்கலம்:

அதிரடிப்படை வீரர்களை தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் ஷீலா ராணி சுங்கத், டிஜிபி கோவிந்த் ஆகியோர்இன்று நேரில் சந்தித்து பாராட்டும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

சத்தியமங்கலத்தில் உள்ள அதிரடிப்படையின் தலைமை முகாமுக்கு இன்று காலை வந்த இருவரும்

விஜயக்குமார், எஸ்.பி செந்தாமரைக்கண்ணன் மற்றும் அதிரடிப்படை வீரர்களை சந்தித்து பாராட்டு தெரிவித்தனர்.

வீரப்பனையும் கும்பலையும் அழைத்து வந்த ஆம்புலன்ஸில் டிரைவராக இருந்த காவலர் சரவணன், வேனுக்கு மிகஅருகில் நின்று வீரப்பன் மீது நேருக்கு நேர் துப்பாக்கி சூடு நடத்தி, குண்டுக் காயம்பட்ட டி.எஸ்.பி. ஹூசேன்ஆகியோருக்கு ஷீலா ராணி சுங்கத் இனிப்புகள் வழங்கி கை குலுக்கி பாராட்டு தெரிவித்தார்.

அதன் பின்னர் ஷீலா ராணி சுங்கத் செய்தியாளர்களிடம் பேசுகையில், வீரப்பனும், கும்பலும் ஒழிக்கப்பட்டுவிட்டாலும் கூட அதிரடிப்படை சிறிது காலத்திற்கு தொடர்ந்து செயல்படும். வீரப்பனின் ஆதரவாளர்கள், தமிழ்த்தீவிரவாதிகள் காட்டுக்குள் தொடர்ந்து இருக்கிறார்களா என்பதை தமிழக அதிரடிப்படை வீரர்கள்கண்காணிப்பார்கள்.

மேலும் மலை வாழ் மக்களின் பாதுகாப்பையும் அவர்கள் உறுதி செய்வார்கள். இதற்காக அதிரடிப்படை சிறிதுகாலத்திற்குக் கலைக்கப்பட மாட்டாது.

வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதன் மூலம் தமிழக அரசுக்கு ஏராளமான பொருட் செலவு மிச்சமாகியுள்ளது.மேலும், மலை வாழ் மக்களின் விவசாயம், பொருளாதாரம் மேம்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

பின்னர் முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பின்படி, வீட்டு மனை தேவைப்படும் இடம், பதவி உயர்வுடன் கூடியபணியில் ஈடுபட விரும்பும் காவல் நிலையம் ஆகியவை குறித்த அதிரடிப் படையினரின் விருப்பக் கடிதங்களைடிஜிபி கோவிந்த் பெற்றுக் கொண்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+