கர்நாடக அதிரடிப்படைக்கும் வீடு, ரூ. 5 லட்சம்
பெங்களூர்:
தமிழக அதிரடிப்படையினரைப் போலவே கர்நாடக அதிரடிப்படை வீரர்களுக்கும் இலவச வீட்டு மனை, தலா ரூ. 5லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் ஒரு படி பதவி உயர்வு வழங்கப்படும் என அம் மாநில முதல்வர் தரம்சிங்அறிவித்துள்ளார்.
வீரப்பன் வேட்டையில் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ள தமிழக அதிரடிப்படையினருக்கு தமிழக முதல்வர்ஜெயலலிதா விரும்பும் ஊரில் இலவச வீட்டு மனை, ரூ. 3 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் ஒரு படி பதவி உயர்வுஆகியவற்றை அறிவித்துள்ளார்.
இந் நிலையில் கர்நாடக வீரர்களுக்கும் இதே போன்ற பரிசை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்தது.வீரப்பனை சுட்டுக் கொன்றது தமிழக அதிரடிப்படை தான் என்றாலும், அதில் கர்நாடகமும் முழு உரிமை கோரநினைக்கிறது.
இதன் ஒரு பகுதியாகவே கர்நாடக அதிரடிப் படையினருக்கும் பரிசுகளை அறிவித்துள்ளார் முதல்வர் தரம்சிங்.
அவர் கூறுகையில், கர்நாடக அதிரடிப் படைக்கு ரூ. 50 கோடி மதிப்பில் பரிசுகளை வழங்க தீர்மானித்துள்ளோம்.ஒவ்வொரு வீரருக்கும் இலவச வீட்டு மனை, ரூ. 5 லட்சம் ரொக்கப் பரிசு, ஒரு படி பதவி உயர்வு அளிக்கப்படும்.
அதிரடிப் படையை அடுத்து என்ன செய்வது என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும். நக்சலைட்களைஒழிக்கும் பணியில் அவர்கள் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என்றார்.
பிரதமருக்கு தரம்சிங் கடிதம்:
முன்னதாக வீரப்பனும், அவன் கூட்டாளிகளும் சுட்டுக் கொல்லப்பட்டதை விளக்கி பிரதமர் மன்மோகன் சிங், மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ்பாட்டீல், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோருக்கு கர்நாடக முதல்வர் தரம்சிங் கடிதங்கள் அனுப்பியுள்ளார்.
அக் கடிதத்தில்,
தமிழக, கர்நாடக அதிரடிப் படையினர் அடிக்கடி சந்தித்துப் பேசி, ஒருங்கிணைந்து செயல்பட்டதன் மூலம் வீரப்பனை வீழ்த்த முடிந்தது. இந்த ஒருங்கிணைந்தநடவடிக்கையால் வீரப்பனும் அவனது கூட்டாளிகளும் தப்ப முடியாதபடி நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
சம்பவம் நடந்த தினத்தன்று கிடைத்த நம்பிக்கைக்குரிய தகவலின் அடிப்படையில் வீரப்பன் வரும் வழியில் அதிரடிப்படை வீரர்கள் நிறுத்தப்பட்டனர்.அதனையடுத்து நடந்த துப்பாக்கிச் சண்டையில் வீரப்பனும் அவனது கும்பலும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
வீரப்பனையும், அவன் கூட்டாளிகளையும் அழைத்து வந்த ஆம்புலன்ஸ் வேன் டிரைவர் தப்பி விட்டார். (இந்த வேனை ஓட்டி வந்ததே தமிழக அதிரடிப்படை வீரர்என விஜய்குமார் கூறும் நிலையில் தரம்சிங் இவ்வாறு கூறுவது முக்கியத்துவம் பெறுகிறது)
கடந்த 15ம் தேதியே பத்திரிகையாளர்களுக்கு நான் பேட்டியளிக்கும் போது, வீரப்பன் கும்பலுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைகோடிட்டு காட்டியிருந்தேன்.
இவ்வாறு தரம்சிங் தனது கடிதத்தில் கூறியிருக்கிறார். வீரப்பனை கொன்றது தமிழக அதிரடிப்படையாக இருந்தாலும் கர்நாடகத்துக்கும் அதில் முழு பங்குஇருப்பதாகக் காட்ட கடும் முயற்சி எடுத்து வருகிறது அந்த மாநில அரசு.












Click it and Unblock the Notifications