வீரப்பன் கொலை: விசாரணை கோரி வழக்கு
பெங்களூர்:
வீரப்பன் கொலையில் சந்தேகம் இருப்பதால் அது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரிகர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் ரகு மோகன் ரெட்டி என்பவர் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:
வீரப்பனை உயிருடன் பிடிக்காமல் சுட்டுக் கொன்றது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இது முன்யோசனையின்றி நடத்தப்பட்டதா அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்டதா என்ற கேள்வி மக்கள் மத்தியில்எழுந்துள்ளது.
உயிருடன் பிடித்திருந்தால் பல உண்மைகள் வெளியாகும் என்ற அச்சத்தின் காரணமாக வீரப்பன்கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் அனைவரது மனதிலும் உள்ளது. எனவே வீரப்பன் கொலை குறித்து நீதிவிசாரணை நடத்த வேண்டும். தமிழக, கர்நாடக அரசுகளையும், இரு மாநி அதிரடிப்படை தலைவர்களையும்பிரதிவாதிகளாக சேர்க்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications