ஓரளவு தீர்ந்த கன்னட சினிமா பிரச்சினை

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

கர்நாடகத்தில் பிற மொழிப் படங்களை வெளியிடுவதில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த கன்னடத்திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.

கர்நாடகத்தில் கன்னடம் அல்லாத பிற மொழிப் படங்களை திரையிடுவதற்கு கன்னடத் திரைப்பட வர்த்தக சபைசில கட்டுப்பாடுகளை விதித்தது. 7 வாரங்கள் கழித்தே புதிய கன்னடம் அல்லாத திரைப்படங்களை வெளியிடவேண்டும் என்பது அதில் முக்கியமானது.

இந்த தடைக்கு கர்நாடகத் திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தடையை மீறிசமீபத்தில் புதிய கன்னடம் அல்லாத திரைப்படங்களைத் திரையிட்ட திரையரங்குகள் மீது கடும் தாக்குதல்நடத்தப்பட்டன.

இந் நிலையில் ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், 7வாரத் தடைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

இருப்பினும் இந்த தடை உத்தரவை கர்நாடக திரைப்பட வர்த்தக சபை கண்டுகொள்ளவில்லை. அவர்களின்நிர்பந்தம் மற்றும் கர்நாடக முதல்வர் தரம்சிங்கின் கோரிக்கையை ஏற்று தொடர்ந்து 7 வாரத் தடையை அமல்படுத்தவேண்டிய கட்டாயத்திற்கு கர்நாடகத் திரையரங்க உரிமையாளர்கள் தள்ளப்பட்டனர்.

இந் நிலையில் கர்நாடக துணை முதல்வர் சித்தராமையா கன்னடத் திரையுலகினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.பேச்சுவார்த்தைக்குப் பிறகு சித்தராமையா செய்தியாளர்களிடம் பேசுகையில,

பிற மொழித் திரைப்படங்களை திரையிடுவது தொடர்பான பிரச்சினைக்கு சுமூக தீர்வு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்தவிவரங்களை தற்போது கூற முடியாது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் வழக்கு முடிந்த பின்னரேஉடன்பாடு குறித்து கூற முடியும் என்றார்.

இருப்பினும் தற்போது விதிக்கப்பட்டுள்ள 7 வாரத் தடையை 3 வாரமாக குறைக்க கர்நாடக திரைப்பட வர்த்தகசபை ஒப்புக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், புதிய படங்களுக்கு கர்நாடகத்தில் 6 பிரதிகளை மட்டுமேஅனுமதிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, பிற மொழிப் படங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படவில்லை என்று தெரிய வருகிறது.இதற்கிடையே, தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடித்துள்ள சங்கர்தாதா எம்.பி.பி.எஸ். படத்திற்கு மட்டும் தடைவிதிப்பதில்லை எனவும் தங்கு தடையின்றி அந்த தெலுங்குப் படத்தை கர்நாடகம் முழுவதும் திரையிடஅனுமதிப்பது எனவும் பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+