மதுரை மாநகராட்சியில் வீரப்பன் சண்டை!

Subscribe to Oneindia Tamil

மதுரை:

வீரப்பன் மனைவிக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும். அவனது மகள்களை அரசே தத்தெடுத்துக் கொள்ளவேண்டும் என்று மதுரை மாநகராட்சிக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறியதற்கு அதிமுகஉறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு அமளி, துமளி ஏற்பட்டது.

மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் செ.ராமச்சந்திரன் தலைமையில் இன்று நடந்தது. அப்போதுமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் மகாதேவன் பேசுகையில்,

வீரப்பனின் மகள்கள் இருவரையும் தமிழக அரசு தத்தெடுத்து அவர்களுக்கு கல்வி உதவி அளிக்க வேண்டும்.அதேபோல, வீரப்பனின் மனைவி முத்துலட்சுமிக்கும் தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்றார்.

இதற்கு அதிமுக கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் போட்டனர். இதையடுத்து மார்க்சிஸ்ட்உறுப்பினருக்கு ஆதரவாக பிற உறுப்பினர்கள் குரல் கொடுத்தனர்.

இதனால் கூட்டத்தில் அமளி, துமளி நிலவியது. பின்னர் மேயர் தலையிட்டு இப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளிவைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+