தமிழ் பெயர் பலகை: ஜெ.வுக்கு ராமதாஸ் கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழில் பெயர்ப்பலகைகள் வைக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கியுள்ள முதல்வர் ஜெயலலிதா, அந்தப் பெயர்கள் சரியான தமிழில்எழுதப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழில் பெயர்ப் பலகைகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இது 20 ஆண்டுகளுக்குமுன்பே பிறப்பிக்கப்பட்ட உத்தரவு என்றாலும், ஜெயலலிதா அதை கட்டாயமாக்க உத்தரவிட்டிருப்பது தமிழ் பாதுகாப்பு இயக்கத்திற்குகிடைத்த முதல் கட்ட வெற்றியாகும்.

கடந்த 1990ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி கருணாநிதி தலைமையிலான திமுக அரசு, பெயர்ப்பலகைகள் சரியான தமிழ் சொற்களில்எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி ஒச்தூச்ட் குடிடூடு ஏணிதண்ஞு என்பதை ஜெயம் சில்க் ஹவுஸ் என்று எழுதக்கூடாது.ஜெயம் பட்டு மாளிகை என்று எழுத வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ஜெயலலிதா கண்டு கொள்ளாமல் விட்டது ஏன்? இந்த உத்தரவு திமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்டது என்பதாலா? 1990ம்ஆண்டின் உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் எடுக்கும் நடவடிக்கை பாதிக்கிணறை தாண்டுவதற்கு ஒப்பாகும் என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+