குவாரி குளத்தில் மூழ்கி 3 இளம் பெண்கள் சாவு
Subscribe to Oneindia Tamil
பழனி:
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கல் குவாரியில் தேங்கியிருந்த நீரை எடுக்கச் சென்ற 3 இளம் பெண்கள்பரிதாபமாக அதில் மூழ்கி இறந்தனர்.
சமீபத்திய மழையில் இந்த குவாரியில் பெரும் அளவில் தண்ணீர் தேங்கியிருந்தது. குளம் போல தண்ணீர்நிறைந்திருந்தால், அதில் தண்ணீர் எடுக்க அப்பகுதிப் பெண்கள் சென்றனர்.
இதில் 3 இளம் பெண்கள் குளத்தின் நடுப் பகுதி வரை சென்றுள்ளனர். மிக ஆழமான பள்ளம் இருப்பது தெரியாமல்நடந்த அவர்கள் அதில் மூழ்கினர்.
நீச்சல் தெரியாததால் அவர்களால் தப்ப முடியவில்லை. மூவருமே நீரில் மூழ்கி இறந்தனர். இதையடுத்துதீயணைப்புப் படையினருக்குத் தகவல் தரப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து குளத்தில் மூழ்கிய மூன்று இளம்பெண்களையும் பிணங்களாக மீட்டனர்.












Click it and Unblock the Notifications