தனுஷை கடத்த முயன்ற இருவர் கைது
சென்னை:
நடிகர் தனுஷ் எங்களுடைய வளர்ப்பு மகன்; அவரை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி தனுசின்வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தனுஷின் வீடு சென்னை நந்தம்பாக்கம் டிபென்ஸ் காலனியில் உள்ளது. அவரது வீட்டிற்கு அப்துல் மஜீத் (35),ரமேஷ் (29) என்ற இருவர் வந்தனர். அவர்கள் அங்கிருந்த தனுஷின் தாய்மாமனும், மானேஜருமானமுத்துகிருஷ்ணனிடம் சென்றனர்.
அவரிடம் அப்துல் மஜீத், நான் கடந்த 1987-ம் ஆண்டு சரவணகுமார் என்ற சிறுவனை தத்து எடுத்து வளர்த்தேன்.அவன் காணாமல் போய்விட்டான். அவன்தான் தனுஷ். எனவே தனுஷை என்னிடம் ஒப்படைக்க வேண்டும்.இல்லையென்றால் ரூ.15 லட்சம் தரவேண்டும் என்று மிரட்டினார்.
இதுகுறித்து முத்துகிருஷ்ணன் நந்தம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து தனுஷ் வீட்டுக்கு விரைந்தபோலீஸார் அப்துல்மஜீத், ரமேஷ் ஆகியோரை கைது செய்தனர்.
அவர்கள் இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில், அப்துல் மஜீத், ராஜபாளையம் அருகே உள்ளமலைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் என்பதும், அவருக்கு மெஹபூப் (30) என்ற மனைவியும், செய்யது அலி (20),பீமா (13), மல்கர் (8) ஆகிய பெண் குழந்தைகளும் இருப்பது தெரியவந்தது.
சரவணகுமார் என்ற சிறுவனுக்கு தான் அஷ்ரப் என்று பெயர் சூட்டி வளர்த்து வந்ததாகவும், அவன்தான் தனுஷ்என்றும் அப்துல்மஜீத் தன்னுடைய நண்பர் ரமேசிடம் தெரிவித்தார்.
ரமேஷ் தனக்கு தனுஷ் வீடு தெரியும் என்று கூறி அப்துல் மஜீத்தை அழைத்துச் சென்றதாக விசாரணையில்தெரியவந்துள்ளது.
கைதான அப்துல்மஜீத், ரமேஷ் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 448 (அத்துமீறி நுழைதல்), 384 (பணம்பறித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தனுஷ் பேட்டி:
இந்தச் சம்பவம் குறித்து தனுஷ் நிருபர்களிடம் கூறுகையில்,
என்னை 14 வயது வரை வளர்த்ததாக அவர் கூறுவதைக் கேட்கும்போது எனக்கு சிரிப்புதான் வருகிறது. இதுஅபத்தமானது. இதுபோல பைத்தியக்காரன் தான் சொல்ல முடியும். எதற்காக அவர்கள் இப்படிச் செய்தார்கள்என்பது தெரியவில்லை என்றார்.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications