ஆளுநர் மாற்றத்துக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்
டெல்லி:
ஆளுநரை இடமாற்றம் செய்ய தடை விதிக்குமாறு தமிழக அரசு விடுத்த கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம்மறுத்துவிட்டது.
ஆளுநர் ராம்மோகன் ராவ் மாற்றப்படலாம் என்ற பேச்சு எழுந்தவுடன் ஞாயிற்றுக்கிழமையே தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி லஹோத்தியிடம் ஒரு அவசர மனுவைத் தாக்கல் செய்தது.
அதில், திமுகவின் நிர்பந்தம் காரணமாக ஆளுநர் ராம்மோகன் ராவை மாற்ற மத்திய அரசு முயல்கிறது.ஆளுநர்பதவிக்கு நியமிக்கப்பட்டவரை இடையில் மாற்றும் முன், மாநில அரசின் கருத்தை மத்திய அரசு கேட்டுப் பெறவேண்டும் என்று உத்தரவிட வேண்டும்.
இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை மாநில ஆளுநரை நீக்கவோ, இடமாற்றம் செய்யவோ அனுமதிக்கக்கூடாது. தமிழக ஆளுநரை இடமாற்றம் செய்ய மத்திய அரசு முயல்வதால், இதை மிக அவசரமான மனுவாகக்கருதி விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி லஹோத்தி, நீதிபதி மாத்தூர் ஆகியோர் அடங்கியடிவிஷன் பெஞ்ச், ஆளுநர் மாற்றத்துக்கு தடையோ, இடைக்காலத் தடையோ விதிக்க மறுத்துவிட்டது.
நீதிபதிகள் கூறுகையில், கவர்னர் மாற்றப்பட போகிறார் என்று சொல்லி அவசர, அவசரமாக இந்த வழக்கை மாநிலஅரசு ஞாயிற்றுக்கிழமையில் தாக்கல் செய்தது. கவர்னர் மாற்றப்பட்டுவிட்டாரா?, மனுவில் நீங்கள் குறிப்பிட்டஏதாவது நடந்ததா?
மாநில ஆளுநராக யாரை நியமிக்க வேண்டும் என்று மாநில அரசிடம் மத்திய அரசு அனுமதி கேட்க முடியுமா?என்றனர்.
அப்போது பேசிய தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் என்.ஆர். சந்திரன், ஆளுநரை நியமிக்கும் முன் மாநிலஅரசின் கருத்தை கேட்பது அவசியம் என்றார்.
இதையடுத்துப் பேசிய நீதிபதிகள், இதை வழக்கமான வழக்காக விசாரிப்போம். ஆளுநர் மாற்றத்துக்குஇடைக்காலத் தடை எல்லாம் விதிக்க முடியாது என்று அறிவித்தனர்.
ஆளுநர் மாற்றத்தை தவிர்க்கக் கோரி ஜனாதிபதியிடமும் அதிமுகவின் சார்பில் மனு கொடுக்கப்பட்டதுகுறிப்பிடத்தக்கது.
ம.பி ஆளுநர் ராஜினாமா:
இதற்கிடையே மத்தியப் பிரதேச ஆளுநரும் பா.ஜ.க. மூத்த தலைவருமான மதன்லால் குரானா இன்று தனதுபதவியை ராஜினாமா செய்தார்.
டெல்லிக்குத் திரும்பிவிட்ட அவர் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடவுள்ளார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்குவந்தவுடன் பல மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. ஆதரவு கவர்னர்களை நீக்கிய மத்திய அரசு, குரானாவைமட்டும் நீக்கவில்லை.
ம.பி. முதல்வராக இருந்த உமா பாரதியுடன் நிழல் யுத்தம் நடத்தி வந்தார் குரானா. இருவரும் பா.ஜ.கவைச்சேர்ந்தவர்களாக இருந்தாலும், இருவருக்கும் இடையே மோதல் நடந்து வந்தது. இதனால் உமா பாரதிக்குதொல்லை தர குரானாவை விட்டு வைத்தது.
ஆனால், இப்போது உமா பாரதி முதல்வர் பதவியில் இல்லை. மேலும் பா.ஜ.கவில் பல மாற்றங்கள் நடந்துவருகின்றன. அத்வானியின் தீவிர ஆதரவாளரான குரானா மீண்டும் டெல்லி மாநில அரசியலுக்குத் திரும்பிவிடும்நோக்கில் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications