மருதுபாண்டியர் தபால் தலை: நான் தான் காரணம்- திரு
சென்னை:
மருது பாண்டியர் தபால் தலை வெளியிடப்பட்டதற்கு நான்தான் காரணம் என்று முன்னாள் மத்திய அமைச்சர்திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
நேற்று மருதுபாண்டியர் தபால் தலையை சென்னையில் வெளியிட்ட தயாநிதி மாறன் தன்னால்தான் இதுவெளியிடப்பட்டது என்று கூறியுள்ளார்.
மதுரையில் நடந்த விழாவில் சபாநாயகர் காளிமுத்து, பொதுப்பணித்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர்முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியதால்தான் தபால்தலை வெளியிடப்பட்டது என்று பேசியுள்ளனர்.
உண்மையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் நான் தபால் துறை அமைச்சராக பதவி வகித்தபோதுஎன்னால்தான் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. 2004ம் ஆண்டில் என் தலைமையில் நடந்த கமிட்டிகூட்டத்தில் திருப்பூர் குமரன், பத்திரிக்கையாளர் வாசன், மருது சகோதரர்கள், மான்போர்ட் சகோதர்கள் உள்படதமிழகத்தைதச் சேர்ந்த 7 பேருக்கு தபால் தலை வெளியிடுவது என முடிவு செய்து அதற்கான அரசாணையை நான்வெளியிட்டேன்.
போனஸ் பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு உடனடியாக சம்பந்தப்பட்ட சங்கங்களை அழைத்துப் பேசவேண்டும். அதேபோல் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க உடனடிநடவடிக்கை எடுக்க வேண்டும்.
வீரப்பன் அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது மகிழ்ச்சி தருகிறது. வருகிற 30ம் தேதி பசும்பொன்னில்நடக்கும் தேவர் ஜெயந்தி விழாவில் முன்னால் பாஜக தலைவர் வெங்கையா நாயுடு, தமிழக பாஜக தலைவர்சி.பி.ராதாகிருஷ்ணன் உள்பட பாஜக முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
அன்றைய தினம் மதுரையில் இருந்து 10 கி.மீ. தொலைவில் அமைக்கப்பட்டுள்ள முத்துராமலிங்கத் தேவர்சிலையை வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார்.
மத்திய பணியாளர் தேர்வில் தமிழில் எழுதுவது நிறுத்தப்பட்டுள்ளது குறித்து முன்னாள் பிரதமர் வாஜ்பாயிடம்கூறியபோது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோகூறியிருக்கிறார்.
வாஜ்பாயை எந்த அளவுக்கு வைகோ புகழ்ந்தார் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனாலும் அவர் கோரிக்கைநியாயமானதுதான் என்றார் திருநாவுக்கரசர்.
-
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications