வீரப்பன்: உண்மை கண்டறியும் குழு விசாரணை

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி:

வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டானா அல்லது தற்கொலை செய்து கொண்டானா என்பது குறித்த உண்மையை கண்டறியஅமைக்கப்பட்டுள்ள சுயேச்சையான உண்மை அறியும் குழுவினர் இன்றும் நாளையும் விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்.

வீரப்பன் சாவு குறித்து அவனது மனைவி முத்துலட்சுமி சந்தேகம் தெரிவித்துள்ளார். இந் நிலையில் தமிழக குடியுரிமை பாதுகாப்பு நடுவம்என்ற அமைப்பு உண்மை கண்டறியும் குழுவை அமைத்துள்ளது.

வழக்கறிஞர் ஹரிபாபு என்பவரை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டுள்ள இந்தக் குழுவில் தமிழகம் மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்தவழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் என 19 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இதுகுறித்து ஹரிபாபு கூறுகையில், இன்று தர்மபுரி மாவட்டம் பாடி கிராமத்திற்கும், பாப்பாரப்பட்டிக்கும் செல்கிறோம். அங்குவீரப்பனுக்கும், அதிரடிப்படையினருக்கும் இடையே நடந்த மோதல் குறித்து கிராமத்தினரிடம் விசாரிக்கவுள்ளோம்.

பின்னர் வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன் உள்ளிட்டோரின் குடும்பத்தினரை சந்திக்கவுள்ளோம். அதன் பின்னர் வீரப்பன் உடலைப்பிரேதப் பசோதனை செய்த டாக்டர்களை சந்திக்கவுள்ளோம். அதன் பின்னர் அதிரடிப்படை அதிகாரிகளையும் சந்திக்கப் போகிறோம்.

பின்னர் நாங்கள் சேகரித்த தகவல்களை முழுவதும் ஆராய்ந்து அவற்றை சேலத்தில் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் தெரிவிக்கவுள்ளோம்.எங்களுக்குக் கிடைத்த தகவலில் பலத்த சந்தேகம், அதற்கேற்ற வகையில் ஆதாரங்களும் இருந்தால் நீதிமன்றத்தை நாடி இதுகுறித்து தீர்வுகாண்போம் என்றார் ஹரிபாபு.

முத்துலட்சுமி பல்டி:

வீரப்பன் பிணத்திற்கு மறுபிரேத பரிசோதனை செய்யும் எண்ணமில்லை; வாய்ப்பு கிடைத்தால் தேர்தலில்போட்டியிடுவேன் என்று கூறியிருந்த முத்துலட்சுமி இப்போது அதை மாற்றிப் பேச ஆரம்பித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டியில்,

எனது கணவர் போலீஸாரின் துப்பாக்கிக்கு இரையாக வாய்ப்பில்லை. அவர் வீரமானவர். தன்னை சுடவருபவர்களில் 20 பேரைக் கொன்ற பிறகுதான் தனது உயிரை விட வேண்டும் என்று நினைத்தவர்.அப்படிப்பட்டவரை போலீஸார் சுட்டுக் கொன்றிருக்க வாய்ப்பில்லை.

அவருக்கு மிகவும் நம்பிக்கையானவர்களே உணவில் விஷம் கொடுத்தோ, வேறு வகையிலோ கொன்றுஇருக்கலாம்.

எனது கணவர் மரணத்தின் உண்மைநிலை அறிய மனித உரிமை கழகத்தை நாடுவேன். அவரது பிணத்தைதோண்டி எடுத்து விசாரணை நடத்த சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+