வீரப்பன்: புத்தகம் எழுதும் விஜயக்குமார்
சென்னை:
வீரப்பன் தொடர்பான தனது ஆபரேசன், எண்ண அலைகளை புத்தகமாக எழுதப் போவதாக அதிரடிப்படையின்தலைவர் விஜயகுமார் கூறியுள்ளார்.
விஜயக்குமார் கூறுகையில், வீரப்பனின் நெற்றியில் இருக்கும் குண்டு பாய்ந்த அடையாளம், அருகிலிருந்துசுட்டதால் ஏற்பட்டது என்றும், அதனால் அவன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் கூறுவது தவறு.
அதிரடிப்படையினர் பதுங்கி இருந்த வாகனம், வீரப்பன் வந்த வேனுக்கு மிக அருகில்தான் நிறுத்தி வைக்கப்பட்டுஇருந்தது. அவனை அருகில் இருந்துதான் சுட்டோம். நிச்சயம் அவன் தற்கொலை செய்து கொள்ளவில்லை. இதைநான் உறுதியாக கூற முடியும்.
எந்த ஒரு சந்தேகமும் வெளிவராதபடி மிக ரகசியமாக அவனுடைய வட்டத்துக்குள் எங்கள் வீரர்கள்ஊடுருவியதுதான் வீரப்பனுக்கு துரதிர்ஷ்டமாக அமைந்தது.
பட்டுப்புழு தன்னைச் சுற்றி கட்டும் கூட்டை உரிய காலத்துக்கு பிறகு புழுவைக் கொன்று பட்டு நூலுக்காகபயன்படுத்திக் கொள்வார்கள். அதுபோலவே வீரப்பனை மெதுவாக சுற்றி வளைத்து சரியான காலத்தில் வெளியேஇழுத்து தீர்த்துக் கட்டுவதற்காகவே ஆபரேஷன் குக்கூன் என்று இந்த நடவடிக்கைக்கு பெயர் வைத்தோம்.
துப்பாக்கிச்சண்டை முடிந்ததும், வீரப்பன் இறந்து விட்டானா என்பதை உறுதி செய்த பின்புதான் நிம்மதிஅடைந்தேன்.
இந்த மரணத்தைத் தேடிக் கொண்டது வீரப்பன் தான். அவன் எங்களிடம் சரண் அடைந்து இருக்கலாம். முதலில்கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்த நினைத்தோம். ஆனால், அங்கிருந்து துப்பாக்கி குண்டுகள் முழங்கின.ஏற்கனவே பல பேரை இழந்த நாங்கள், மேலும் உயிர்ப்பலி கொடுக்க தயாராக இல்லை. அதனால்தான்சுட்டுக்கொல்வது தவிர்க்க முடியாதது ஆகி விட்டது.
ஆரம்ப காலங்களில் வீரப்பனுக்கு சில அரசியல்வாதிகளுடன் அவனுக்கு தொடர்பு இருந்து இருக்கலாம்.பிற்காலத்தில் அவனுக்கு அரசியல் தொடர்பு எதுவும் இல்லை.
தந்தையின் சாவுக்கு பழி வாங்குவேன் என்று வீரப்பன் மகள் சபதம் ஏற்றதாக கூறப்படுகிறது. அவளுடையஉணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. தந்தையை இழந்த துயரத்தில் இருக்கிறாள். அவள் ஒருகுழந்தைதானே.
அடுத்து ஒரு ஆன்மீக பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். தற்போது 90 நாட்கள் விரதம் தொடங்கி இருக்கிறேன்.சபரிமலை கோயிலுக்கும், மூகாம்பிகை கோயிலுக்கும் செல்லவிருக்கிறேன்.
பின்னர் எனது எண்ண அலைகளை ஒரு புத்தகமாக வெளியிடுவேன் என்று விஜயகுமார் கூறினார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications