ஜெனரேட்டர் புகையால் பலியான கணவன், மனைவி!
கடலூர்:
கடலூர் அருகே புவனகிரியில் ஜெனரேட்டரிலிருந்து வந்த புகையில் மூச்சுத் திணறி தூக்கத்திலேயே கணவனும்,மனைவியும் பரிதாபமாக இறந்தார்கள்.
பழனிச்சாமி- விஜய்லட்சுமி தம்பதி தங்கள் மகன் விஜய், மகள் வினோதினியுடன் நேற்றிரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது மின்தடை ஏற்பட்டது. பேன் இல்லாமல் தூங்க முடியாத அளவுக்கு புழுக்கம் நிலவவே,அருகில் உள்ள தனது துணிக் கடையில் இருந்து ஜெனரேட்டரை எடுத்து வந்தார் பழனிச்சாமி.
வீட்டுக்குள் வைத்து ஜெனரேட்டரை இயக்கினார் பழனிச்சாமி. கதவுகளும் ஜன்னல்களை மூடப்பட்ட நிலையில்ஜெனரேட்டலிருந்து கிளம்பிய புகை வெளியே செல்ல முடியாமல் அறைக்குள்ளேயே சுற்றி வந்தது.
இதனால், ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த நான்கு பேருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதில் பழனிச்சாமியும்,பத்மாவதியும் பரிதாபமாக இறந்துள்ளனர். காலையில் கதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தில் இருந்தோர்கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அப்போதுதான் இந்த பரிதாப சாவு குறித்துத் தெரியவந்தது.
நச்சுக் காற்றை சுவாசித்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த விஜய்யும், வினோதினியும் பாண்டிச்சேரி ஜிப்மர்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications