கச்சத்தீவை குத்தகைக்கு எடுக்க ஜெ. யோசனை!
சென்னை:
கச்சத்தீவு மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளை இந்தியா நீண்ட கால குத்தகைக்கு எடுக்க வேண்டும் என்று மத்தியஅரசுக்கு முதல்வர் ஜெயலலிதா யோசனை தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
கச்சத் தீவு மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள், இலங்கைகடற்படையினரால் தாக்கப்படுவதைத் தடுக்க மத்திய அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கையிடம் இருந்து கச்சத்தீவு மற்றும் அதன் சுற்றுப் பகுதி தீவுகளை நீண்ட கால குத்தகைக்கு எடுக்க வேண்டும்.இதன் மூலம் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதைத் தடுக்கலாம்.
கச்சத் தீவைச் சுற்றிலும் 5 கி.மீ. தொலைவுக்கு தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக் கொள்ள அனுமதிக்கப்படவேண்டும் என்று கடந்த 3 ஆண்டுகளாக நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
இலங்கை சிறையில் வாடி வரும் தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் மீட்க என்னால் முடிந்தஅனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளேன் என்று கூறியுள்ளார் அவர்.
மீனவர்களுக்கு சலுகை:
இதற்கிடையே, மீனவர்களுக்கு வழங்கப்படும் டீசலுக்கான விற்பனை வரியை ரத்து செய்வதாக ஜெயலலிதாஅறிவித்துள்ளார்.
இதனால், தற்போது மீனவர்களுக்கு லிட்டருக்கு ரூ. 26.93க்கு வழங்கப்படும் டீசல், இனிமேல் ரூ. 21.60க்குவழங்கப்படும்.
இந்த விலை குறைப்பு மூலம் மாநிலம் முழுவதும் இயந்திரப் படகுகளை பயன்படுத்தும் 5,000 மீனவர்களும்,நாட்டுப் படகுகளைப் பயன்படுத்தும் 15,200 மீனவர்களும் பயனடைவர் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் கடந்த இரு வாரங்களாக மீனவர்கள் போராட்டம் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications