அரசியல் பக்குவம்: தயாநிதி குறித்து ஜெ. கிண்டல்
சென்னை:
மருதுபாண்டியர் நினைவு தபால் தலை வெளியிட தமிழக அரசு தடையாக இருந்ததாகக் கூறிய மத்திய தகவல்ஒளிபரப்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறனுக்கு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மருதுபாண்டியர்கள் தபால் தலையை வெளியிட தமிழக அரசு இடைஞ்சலாக இருந்ததாகவும், இதனால் தான் இதைவெளியிட கால தாமதம் ஆனதாகவும் சுற்றி வளைத்து குற்றம் சாட்டியுள்ளார் தயாநிதி மாறன்.
இது அடிப்படையே இல்லாத குற்றச்சாட்டு. அரசியலிலும் நிர்வாகத்திலும் இன்னும் பாலபாடம் பயில வேண்டியநிலையில் இருப்பதை மாறனின் பேச்சு தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
2002ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதியே நான் மருதுபாண்டியர்களுக்கு நினைவு தபால் தலை வெளியிட வேண்டும்என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதினேன். அந்த கோப்புகளை எடுத்துப் பார்த்தால் மாறனுக்கு உண்மைவிளங்கும்.
2003ம் ஆண்டு மார்ச் 17ம் தேதி இந்தக் கடிதத்துக்கு மத்திய அரசிடம் இருந்து பதில் வந்தது. அதில்,மருதுபாண்டியர் சகோதரர்களுக்கு தபால் தலை வெளியிட இயலாது என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து அப்போதைய பிரதமர் வாஜ்பாயிடம் இது குறித்து நேரில் பேசினேன். இதைத் தொடர்ந்து தகவல்ஒளிபரப்புத்துறை தனது நிலையை மாற்றிக் கொண்டு, 2004ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி ஒரு கடிதம் அனுப்பியது.
அதில் அக்டோபர் 24ம் தேதி இந்த தபால் தலை வெளியிடப்படும் என்று கூறப்பட்டிருந்தது. மாறன் மத்தியஅமைச்சராவதற்கு முன்பே இதெல்லாம் நடந்து முடிந்துவிட்டது.
உண்மை இப்படி இருக்க, மருதுபாண்டியர் நினைவு தபால் தலை வெளியிட தானே காரணம் என்றும், இதைநாங்கள் தடுக்க முயற்சித்ததாகவும் பேசியிருக்கிறார் மாறன். இதன் மூலம் அரசியலில் தான் இன்னும்பக்குவப்படவில்லை என்பதை காட்டிவிட்டார்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications