கூட்டணி உடைக்க உளவு போலீஸ் முயற்சி: ராமதாஸ்
மதுரை:
திமுக தலைமையிலான கூட்டணியில் பிளவை ஏற்படுத்தும் வேலையில் உளவுப் பிரிவு போலீசாரை முதல்வர்ஜெயலலிதா ஈடுபடுத்தியுள்ளதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
மதுரையில் நிருபர்களிடம் பேசிய அவர்,
வரும் சட்டமன்றத் தேர்தலிலும் திமுக தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தொடரும். அதிலிருந்துஎந்தக் கட்சியும் விலகாது. வேண்டுமானால், ஜெயலலிதாவை தோற்கடிக்க விரும்பும் மேலும் சில கட்சிகள் கூடஇதில் இணைய வாய்ப்புள்ளது.
மக்களவைத் தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளில் வென்ற எங்கள் கூட்டணி, அப்போது மக்களுக்குத் தந்தவாக்குறுதிகளில் 50 சதவீதத்தை நிறைவேற்றிவிட்டது. மற்ற உறுதிமொழிகளை சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்நிறைவேற்றுவோம்.
ஜெயலலிதாவைத் தோற்கடிப்பது தான் எங்கள் குறிக்கோள். இதற்காக எந்த தியாகத்தையும் செய்வோம்.இப்போதே சட்டமன்றத் தேர்தல் பயம் வந்துவிட்டதால் தான் உளவுப் பிரிவு போலீசாரை வைத்து, பொய்தகவல்களைப் பரப்பி, கூட்டணிக்குள் குழப்பம் விளைவித்து, அதை உடைக்க ஜெயலலிதா முயல்கிறார்.
ரப்பர் ஸ்டாம்ப் ராம்மோகன்:
தமிழக ஆளுநர் ராம்மோகன் ராவ் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் கவர்னராகத் தான் இருக்கிறார். அவரை நீக்குவதில் எந்தத்தவறும் இல்லை. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் கவர்னர்கள் மாறுவது, மாறறப்படுவது இயற்கை தான்.ராம்மோகன் ராவ் கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்டவர். அவராகவே விலகியிருக்க வேண்டும். விலகாததால்மாற்றப்பட இருப்பதாக சொல்கிறார்கள்.
இதற்கு ஏன் அதிமுக அரசும் ஜெயலலிதாவும் பதற வேண்டும்?. இவரோடு சேர்த்து 5 மாநில கவர்னர்கள்மாற்றப்பட இருக்கிறார்கள். ஆனால், எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழக அரசு மட்டும் அலறுவதுஏன்?.
ராம் மோகனோ.. ராவண மோகனோ..
ஒழுங்காக ஆட்சி நடத்தினால், கவர்னராக யார் இருந்தால் இவர்களுக்கு என்ன கவலை?. மடியில் கனம்இல்லாவிட்டால் பயம் இல்லை. ராம் மோகன் இருந்தால் என்ன?, ராவண மோகன் இருந்தால் என்ன?.ஜெயலலிதாவுக்கு ஏன் இந்த பயம்?
3 வருடமாக ரப்பர் ஸ்டாம்ப் மாதிரி இருந்தார் ராம்மோகன் ராவ். ஜெயலலிதா அரடுக்கு ஆமாம் போடுவதையேவேலையாக வைத்திருந்தார். அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் நடத்தி ஒரு லட்சம் பேர் சஸ்பெண்ட் ஆனபோதுஇவர் அமைதி காத்தார். மத மாற்றத் தடை சட்டத்துக்கு கண்ணை மூடிக் கொண்டு கையெழுத்துப் போட்டார்.
அரசியல் சட்டப்படி இவருக்குக் கொடுக்கப்பட்ட எந்த வேலையையும் ஒழுங்காக செய்யவில்லை. இதனால்அவரை மாற்றுவதில் எந்தத் தவறும் இல்லை.
மாநிலத்தின் நிதி நிலை குறித்து மாதத்துக்கு ஒரு விளக்கத்தை, முரண்பாடான வகையில் கூறிக் கொண்டிருக்கிறார்முதல்வர். இதனால் நிதி நிலை குறித்து ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட அவர் முன் வர வேண்டும் என்றார்ராமதாஸ்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications