தமிழ் பண்பாட்டை சீரழிக்கிறது சினிமா: ராமதாஸ்
மதுரை:
தமிழகத்தில் திரைப்படங்கள் மூலம் தமிழ் சீரழியும் நிலை ஏற்பட்டுள்ளதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்கூறியுள்ளார்.
அவர் நிறுவியுள்ள பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் மதுரையில் இரண்டு நாள் தமிழ் மாநாடுநடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,
தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படும் நேரம் வந்துள்ளது. தமிழைக் காக்க தமிழர்கள் போராடவேண்டிய துர்பாக்கியம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் திரைப்படங்கள் மூலம் தமிழ் சீரழியும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழும், அதன் பண்பாடும் சிதிலமடையதமிழ் சினிமாக்களே முக்கிய காரணம்.
அதேபோல தெலுங்கு, சமஸ்கிருதம், கன்னடம், இந்தி போன்ற பிற மொழிகளுக்கு அளிக்கப்பட்ட ஆதரவும் தமிழ்பாதிக்கப்பட இன்னொரு முக்கிய காரணம். இந்த மொழிகளை கற்றுத் தருவதை தமிழக பல்கலைக்கழகங்கள்,கல்வி நிறுவனங்கள் நிறுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் தமிழைத் தவிர வேறு மொழி இருக்கக் கூடாது என்று பாரதியாரே அன்று போராடியுள்ளார்.அதற்காக இயக்கம் நடத்தியுள்ளார். எனவே எங்களது இயக்கத்தில் எந்தத் தவறும் இல்லை என்றார் ராமதாஸ்.
பி.டி.ஆர். பேச்சு:
முன்னாள் சபாநாயகரும், திமுக முன்னணித் தலைவர்களில் ஒருவருமான பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் பேசுகையில்,
தமிழுக்காக மிகப் பெரிய வேலையில் ராமதாஸ் இறங்கியுள்ளார். சுத்தமான பச்சைத் தமிழர்கள் இந்த பணியைவரவேற்பார்கள். தமிழைப பாதுகாக்க ராமதாஸ் மேற்கொண்டுள்ள முயற்சிக்கு உலகெங்கிலும் உள்ள தமிழர்கள்நன்றிக் கடன்பட்டுள்ளார்கள்.
திமுக தலைவர் கருணாநிதியைப் போலவே, பாமக நிறுவனர் ராமதாஸும் தமிழைக் காக்க களம் கண்டுள்ளார்.தமிழுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி வருவதில் தவறே இல்லை.
மாநிலம் முழுவதும் இதுபோன்ற விழிப்புணர்வு மாநாடுகள் நடத்தப்பட வேண்டும் என்றார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications