வனத்துறையினருக்கும் பரிசு, பதவி உயர்வு: ஜெ
சென்னை:
வீரப்பன் கும்பலைப் பிடிக்க தமிழக அதிரடிப்படையினருக்கு உதவியாக இருந்த வனத்துறையினருக்கும் பதவிஉயர்வு, ரொக்கப் பரிசு, பதக்கங்கள் ஆகியவற்றை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
42 வன அலுவலர்களுக்கு பதவி உயர்வும், தலா ரூ. 1 லட்சம் பரிசும் வழங்கப்படும் என்றும் 105 தினக்கூலி வனத்தோட்டக் காவலர்களின் பணி நிரந்தரமாக்கப்படும் என்றும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
வீரப்பனையும், அவனது கும்பலையும் சுட்டு வீழ்த்திய தமிழக அதிரடிப் படையினர் 752 பேருக்கும் வீட்டு மனை,ரூ. 3 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் பதவி உயர்வை ஜெயலலிதா அறிவித்தார்.
வரும் 30ம் தேதி சென்னையில் நடக்கும் பாராட்டு விழாவில் இவை வழங்கப்படவுள்ளன.
இந் நிலையில் வனத்துறையினரை ஜெயலலிதா புறக்கணித்து விட்டதாக பேச்சு கிளம்பியது. வீரப்பனைப் பிடிக்கும்அதிரடிப்படையினர் முயற்சிக்கு வனத்துறையினர் பெருமளவில் உதவியும் கூட, தங்களை அரசுபுறக்கணித்துவிட்டதாக அவர்கள் வருத்தம் தெரிவித்திருந்தனர்.
இந் நிலையில் வனத்துறையினருக்கும் பரிசுகள், பதவி உயர்வு, பதக்கங்களை ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
பதக்கங்கள்:
இதன்படி வீரப்பன் வேட்டையில் சிக்கி உயிழந்த வனத்துறையினருக்கு வீர தீர பதக்கம் வழங்கப்படும்.காயமடைந்த வனத்துறையினருக்கு வீர தீர விழுப்புண் பதக்கம் வழங்கப்படும். இந்தப் பதக்கம் தங்க முலாம்பூசப்பட்ட வெள்ளிப் பதக்கமாகும்.
சிறப்பு அதிரடிப்படையில் குறைந்தது 2 ஆண்டுகள் பணியாற்றி உயிழந்த மற்றும் காயமடைந்த வீரர்களுக்கும்இந்த பதக்கங்கள் வழங்கப்படும்.
பதவியுயர்வு, பரிசு:
இதுதவிர வனத்துறையினரின் சேவையைப் பாராட்டும் விதமாக 42 வன அலுவலர்களுக்கு ஒரு படி பதவி உயர்வு,தலா ரூ. 1 லட்சம் பரிசு வழங்கப்படும்.
105 தினக்கூலி தோட்டக் காவலர்களின் பணி முறைப்படுத்தப்பட்டு அவர்கள் வனத்துறை தோட்டக் காவலர்களாகபதவி உயர்த்தப்படுவர். தொகுப்பூதிய அடிப்படையில் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.
அதிரடிப்படைக்கு நினைவிடம்:
மேலும், வனத்துறை மற்றும் அதிரடிப்படை வீரர்களின் தீரச் செயலை எதிர்கால சந்ததியினரும் அறிந்து கொள்ளும்வகையில் நினைவிடம் அமைக்கவும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். காவலர் பயிற்சிக் கழக வளாகத்தில் இந்தநினைவிடம் நிறுவப்படவுள்ளது.
மக்களுக்கும் நிவாரணம்:
வீரப்பன் வேட்டையின்போது பாதிக்கப்பட்ட மலை வாழ் மக்களுக்கும் அவர்களது பாதிப்புக்கேற்றபடி உரியநிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான்












Click it and Unblock the Notifications