ஜெ.வை அவதூறாக பேசியதாக வைகோ மீது வழக்கு
காஞ்சிபுரம்:
முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நாளை ஆஜராக வேண்டும் என்றுசெங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளர் கிருஷ்ணசாமியை ஆதரித்துகடந்த மார்ச் மாதம் 23ம் தேதி திருவள்ளூர் அறிஞர் அண்ணா திடலில் நடந்த கூட்டத்தில் வைகோவும், மதிமுகதலைமைப் பேச்சாளர் மணிவேந்தனும் பேசினார்கள்.
அக்கூட்டத்தில் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாகக் கூறி இருவர் மீதும் திருவள்ளூர் போலீசார் வழக்குபதிவு செய்தனர். ஜெயலலிதாவின் சார்பில் செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் ஆறுமுகம்வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கில் நாளை வைகோ, மணிவேந்தன் இருவரும் ஆஜராக அவர்களுக்கு சம்மன் அனுப்பமாறு நீதிபதிஅக்பர் அலி உத்தரவிட்டார்.
வைகோ பேட்டி:
இதுகுறித்து வைகோ கருத்து தெரிவிக்கையில், இதைக் கண்டு நான் அஞ்சவில்லை. சட்டப்படி சந்திப்பேன்.நீதிமன்ற சம்மன் வந்துள்ளது, அதைப் பெற்றுக் கொண்டேன். நாளை செங்கல்பட்டு நீதிமன்றத்தில்ஆஜராகவுள்ளேன்.
எனது பேச்சுரிமையைத் தடுக்கும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது. இதை நாங்கள் சட்டரீதியாகமுறியடிப்போம் என்றார் வைகோ.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications