முகமூடியை கழற்றிவிட்டார் அத்வானி: வாசன் தாக்கு
சென்னை:
ராமர் கோவில் கட்டுவோம் என்று அறிவித்திருப்பதன் மூலம் பா.ஜ.க. தனது பழைய பாதையில் செல்லஆரம்பித்திருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மீண்டும் பாஜக தலைவராகியிருக்கும் அத்வானி, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என்று பிரகடனம்செய்துள்ளதோடு பா.ஜ.கவின் அடிப்படை பலமே சங் பரிவார் அமைப்புகள் தான், அந்த அமைப்புகள் நம்மிடம்நிறையவே எதிர்பார்க்கின்றன என்று கூறியிருக்கிறார்.
ஆனால், 6 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது பேச்சுவார்த்தை மூலமே ராமர் கோவில் பிரச்சனையைத் தீர்க்கவேண்டும் என்றார் இதே அத்வானி. வாஜ்பாயும் இதைத்தான் திரும்பத் திரும்பச் சொன்னார்.
ஆனாஸ், நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்த பா.ஜ.க. மீண்டும் தனது பழைய பாதைக்கேதிரும்பியுள்ளது. இதனால் மீண்டும் முன்னுக்குப் பின் முரணான அறிவிப்புகளை அக் கட்சி வெளியிடஆரம்பித்துள்ளது.
பா.ஜ.கவைப் பொறுத்தவரை கொள்கையிலே குழப்பம், பேச்சுக்களில் முரண்பாடு, செயல் திட்டத்தில் தடுமாற்றம்என்பது வழக்கமாகி விட்டது. இதனால் தான் அக் கட்சிக்கு தோல்வி கிடைத்தது. ஆனாலும், தொடர்ந்து தனதுவழக்கமான சந்தர்ப்பவாத பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
மன்மோகன் சிங்கின் சீரிய ஆட்சியை மதவெறியைத் தாண்டுதவன் மூலம் சீர்குலைத்துவிடலாம் என பா.ஜ.கவினர்நினைக்கிறார்கள். இதற்காகத் தான் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என்று மீண்டும் பேசஆரம்பித்திருக்கிறார் அத்வானி.
மதவெறி மூலம் ரத்தகளரியைத் தூண்டி ஓட்டு வாங்கும் தனது ரகசிய திட்டத்தை மீண்டும் கையில்எடுத்திருக்கிறார்கள். இதுவரை முகமூடி அணிந்து கொண்டு ஆட்சி நடத்தினார்கள். ஆட்சி போனதும் முகமூடியைக்கழற்றிவிட்டார் அத்வானி.
நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடும், அமைதியாகவும் வாழத்தான் விரும்புகிறார்கள். குடும்ப முன்னேற்றத்துக்காகவும்தங்கள் அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகளைத் தீர்க்கவும் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மதவெறிச் சண்டைகள், அநாவசிய சர்ச்சைகள் பிடிக்கவில்லை. அமைதியையே விரும்புகிறார்கள்.
இதனால் தான் மக்களவைத் தேர்தலிலும், மகாராஷ்டிர தேர்தலிலும் அமைதியாக ஆட்சி நடத்துபவர்களுக்குவாக்களித்துள்ளார்கள். மக்களின் மன நிலையை முதலில் பா.ஜ.க. புரிந்து கொள்ள வேண்டும். புரிந்துகொள்ளாமல் தனது மதவெறிப் பயணத்தைத் தொடருமானால் பா.ஜ.கவுக்கு மதசார்பற்ற சக்திகள் தகுந்த பதிலடிதருவார்கள்.
தமிழகத்தில் பா.ஜ.கவுக்கு எதிரான சக்திகளை ஒன்று திரட்டி மாநாடுகள், கருத்தரங்குகள் நடத்த காங்கிரஸ்திட்டமிட்டுள்ளது. இதற்காக மதசார்பற்ற கட்சிகளின் அனைத்தின் உதவிகளையும் நாங்கள் கேட்டுப் பெறுவோம்என்று கூறியுள்ளார் வாசன்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு












Click it and Unblock the Notifications