ராஜ் டிவி விவகாரம்: மத்திய அரசுக்கு நீதிமன்றம் தடை
சென்னை:
விதிமுறைகளை மீறி செயல்பட்டதால், ராஜ் டிவி நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட உரிமத்தை மத்திய அரசு ரத்துசெய்வதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ராஜ் டிவிக்கு வாங்கிய லைசென்ஸை வைத்துக் கொண்டு, உரிய அனுமதி இல்லாமல் ராஜ் மியூசிக் மற்றும்தெலுங்கில் விஸ்ஸா ஆகிய சேனல்களை ராஜ் டிவி தொடங்கி நடத்தி வந்தது.
இதையடுத்து, ராஜ் டிவியின் உரிமத்தை ரத்து செய்யப் போவதாக மத்திய தகவல் தொடர்புத் துறை அறிவித்தது.இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜ் டிவி சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ரவிராஜ பாண்டியன், உரிமத்தை ராஜ் டிவி தவறாகபயன்படுத்தியது உண்மையே என்று கூறி மத்திய அரசின் நடவடிக்கைக்குத் தடை விதிக்க மறுத்து விட்டார்.
இதை எதிர்த்து ராஜ் டிவி மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி கோவிந்தராஜன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்,தீர்ப்பை ஒத்திவைத்தனர். மேலும் இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை ராஜ் டிவி குழுமம் மீதுஎந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று மத்திய அரசுக்குத் தடை விதித்தனர்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications