தமிழக காஙகிரசில் மீண்டும் கோஷ்டி பூசல் தீவிரம்
சென்னை:
தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளைத் தேர்வு செய்ய தேர்தல் நடத்த வேண்டும், எக்காரணம் கொண்டும் உறுப்பினர்நியமனம் கூடாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் வாசனை உறுப்பினர் சேர்ப்பு ஒருங்கிணைப்புக் குழுவலியுறுத்தியுள்ளது.
அகில இந்திய அளவில் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி நடைபெறுகிறது.இதற்காக தற்போது காங்கிரஸில் உறுப்பினர் சேர்ப்புப் பணி தீவிரமாக நடந்த வருகிறது. இப்பணி அடுத்த மாதம்15ம் தேதியுடன் முடிவடையும்.
இந் நிலையில் தமிழக காங்கிரஸில் இருக்கும் பல்வேறு கோஷ்டிகளில் எந்ந்ெத அணியினர் எவ்வளவுஉறுப்பினர்களைச் சேர்க்கிறார்களோ, அந்தளவுக்கு நிர்வாகிகளை மேலிடம் நியமனம் செய்ய திட்டமிட்டிருப்பதாகதகவல்கள் வெளியாகியுள்ளன. இத் தகவல் இளங்கோவன் தரப்பு மட்டுமல்லாமல் அனைத்து காங்கிரஸ்தலைவர்களுக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
இதையடுத்து மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கூடி தீவிர ஆலோசனை நடத்தினர். அப்போது கீழ் வரும் முடிவுகள்எடுக்கப்பட்டன.
கட்சி நிர்வாகிகள் தேர்தலை கட்டாயம் நடத்தியே தீரவேண்டும். யார் உறுப்பினர்களை அதிகமாகசேர்க்கிறார்களோ அவர்களின் ஆதரவாளர்களுக்கு அதிக உறுப்பினர் பதவி வழங்குவது, ஆளுக்கு ஆள்நாட்டாமை செய்யும் நிலைமையை ஏற்படுத்தும். இதனால் நியமனம் செய்யும் தலைவருக்கு மற்றவர்கள்கட்டுப்படமாட்டார்கள்.
இதை ஏற்காவிட்டால் தமிழகத்தில் காமராஜர் ஆட்சி என்பது பொய்த்துப் போய்விடும். மேலும் கட்சியில் எந்தமுன்னேற்றத்தையும் ஏற்படுத்தாமல் தலைவர் பதவியில் (வாசன்) நீடிப்பதைவிட, அதை ராஜினாமா செய்து விடவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இத் தீர்மானங்கள் வாசனுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந் நிலையில் காமராஜர் நாணயம்வெளியீட்டு விழாவிற்காக டெல்லி சென்றுள்ள வாசன், இப் பிரச்சினை தொடர்பாக கட்சி மேலிட நிர்வாகிகளைச்சந்தித்துப் பேசவுள்ளார்.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications