நடிகர் சங்கத்திற்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை:
நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடத்தக் கோரி தொடரப்பட்டுள்ள வழக்கில் இதன் நிர்வாகிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேட்டீஸ்அனுப்பியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த நல்லதம்பி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு விவரம்:
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2000மாவது ஆண்டு நடந்ததேர்தலின்போது தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளின் பதவிக் காலம் 2003ம் ஆண்டு ஜூலை மாதத்திலேயே முடிந்து விட்டது.
ஆனால், அதற்குப் பிறகும் தேர்தல் நடத்தாமலேயே சங்க நிர்வாகிகள் தங்களது பொறுப்புகளில் தொடர்ந்து நீடித்து வருகின்றனர். இதுவிதிகளுக்கு எதிரானது என்று கூறி தேர்தலை நடத்துமாறு நான் கோரினேன். இதனால் என்னை சங்கத்திலிருந்தே நீக்கி விட்டனர்.
என்னை நீக்கியது செல்லாது, சங்கத்திற்கு உடனடியாக தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி குலசேகரன், இதுகுறித்து விளக்கம் அளிக்கக் கோரி சங்க நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
-திரைப்பட விருது விழா ஒத்திவைப்பு
இதற்கிடையே, தமிழக அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2000, 2001, 2002ம் ஆண்டுகளுக்கான தமிழக அரசின் சிறந்த திரைப்படக் கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழா வரும் 1ம்தேதி நடைபெறுவதாக இருந்தது.
இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் தற்போது விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவுக்கு ஆளுநர் ராம் மோகன் ராவ்தலைமை தாங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அவர் திடீரென ராஜினாமா செய்து விட்டதால் விழா தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
-
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட்












Click it and Unblock the Notifications