ஜெயலலிதாவின் செயல் உரிமை மீறலாகும்: பாட்டீல்
ஹைதராபாத்:
தனக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடலை ஜெயலலிதா டேப் செய்து வெளியிட்டது அரசியல்சட்ட உரிமை மீறலாகும் என மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் கூறியுள்ளார்.
ஆளுநர் ராம்மோகன் ராவை நீக்குவது தொடர்பாக சிவராஜ் பாட்டீல் தன்னுடன் தொலைபேசியில் பேசியதை பதிவு செய்த ஜெயலலிதா,அதனை உச்ச நீதிமன்றத்திடம் ஒப்படைத்தார்.
இன்று ஹைதராபாத் வந்த பாட்டீலிடம் இது குறித்து நிருபர்கள் கேட்டபோது,
ராம்மோகன் ராவை நீக்கியதில் எந்தத் தவறும் இல்லை. அரசியல் சட்டத்துக்கு உட்பட்டே அவர் நீக்கம் செய்யப்பட்டார். அதே நேரத்தில்ஜெயலலிதாவுடன் நான் பேசியதை முதல்வர் வெளியிட்டது உரிமை மீறலாகும். இது குறித்து மேலும் நான் விவாதிக்க விரும்பவில்லை.
இதற்கு பதில் சொல்ல வேண்டியது ஜெயலலிதா தான். மாநில ஆளுநர் சர்ச்சைகளுக்குள் இழுக்கப்படக் கூடாது. ராவை நீக்கியதில் எந்தத்தவறையும் மத்திய அரசு செய்யவில்லை. இது எங்கள் அதிகாரத்துக்கு உட்பட்டதே. இது குறித்து முதல்வருடன் ஆலோசிக்கவேண்டியதில்லை என்றார்.
இதற்கிடையே, உள்துறை அமைச்சருடனான தொலைபேசி உரையாடலை வெளியிட்ட ஜெயலலிதா பதவி விலக வேண்டும் என மத்தியஅமைச்சர் இளங்கோவன் கோரினார். இல்லாவிட்டால் அவர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சிங்வி, ஜெயலலிதாவின் செயல் ஜனநாயகமுறைகளுக்கு எதிரானது. மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.
தயாநிதி மாறன் தாக்கு:
உள்துறை அமைச்சருடனான பேச்சை வெளியிட்டதன் மூலம் பெரிய சர்ச்சயைக் கிளப்பிவிட்டார் ஜெயலலிதா என்று கூறியுள்ள மத்தியதொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன், இது அரசியல் சட்ட விரோத செயல் என்றார்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications