செக்ஸ் புகார்: நெல்லை நர்ஸிங் கல்லூரி நிர்வாகி கொலை
நெல்லை:
செக்ஸ் புகாருக்கு உள்ளான நர்சிங் பயிற்சி கல்லூரியின் நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
திருநெல்வேலி பேட்டையில் இந்தியன் காலேஜ் ஆப் டெக்னாலஜி என்ற நர்ஸிங் பயிற்சி மையம் மற்றும் லேப் டெக்னீசியன்பயிற்சி அளித்து வந்தார் மீரான் மைதின் (50). ஓட்டல் பிஸினசிலும் ஈடுபட்ட வந்த இவர் பெண்கள் விஷயத்தில் சபல கேஸ்என்று பெயர் பெற்றவர்.
4 பெண்களுடன் வாழ்க்கை நடத்தி வந்தார். இதில் செல்வி, கீதா ஆகியோர் இவரது பயிற்சி மையத்தில் படிக்க வந்தமாணவிகளாவர்..
இவரது பயிற்சி மைய மாணவிகள் பலரிடமும் இவர் தவறாக நடக்க முயல்வதாக புகார் உண்டு. இந் நிலையில் இவருடன்குடும்பம் நடத்திய பெண்களில் ஒருவரான கீதா என்பவர் குற்றாலத்தில் தமிழ்நாடு பாரா மெடிக்கல் சயின்ஸஸ் என்ற பெயரில்இன்னொரு நர்ஸிங் கல்லூரியை ஆரம்பித்தார்.
அங்கும் மாணவிகள் பாலியல்ரீதியில் துன்புறுத்தப்படுவதாக புகார் எழுந்தது. இதனால் திருநெல்வேலி மற்றும் குற்றாலத்தில்உள்ள இந்த பயிற்சி நிறுவனங்களில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துபோய்விட்டது.
இப்போது திருநெல்வேலி நர்ஸிங் பயிற்சி மையத்தில் 14 மாணவிகள் மட்டுமே பயின்று வருகின்றனர். இவர்களில் 7 மாணவிகள்நீண்ட விடுப்பில் சென்றுவிட்டனர்.
மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டது உள்பட இவர் மீது பல வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
இந் நிலையில் இந்த பயிற்சி மையத்துக்கு வந்த 4 பேர் மீரான் மைதினை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டுதப்பியோடுவிட்டனர்.
மீரான் மைதீனால் பாதிக்கப்பட்ட பெண்களில் யாரோ ஒருவரது உறவினர்கள் தான் ஆள் வைத்து இவரைக் கொன்றிருக்கவேண்டும் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் மீரானால் பாதிக்கப்பட்ட பெண்கள், மீரானுடன் வசித்த பெண்கள்ஆகியோரிடம் விசாரணை நடந்து வருகிறது.
பணத் தகராறு காரணமாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications