லட்சுமி பிரானேஷுக்கு எதிராக திமுக வழக்கு
சென்னை:
மத்திய உள்துறை அமைச்சருக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடலை உச்ச நீதிமன்றத்தில்வெளியிட்ட தமிழக அரசின் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிதிமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஆளுநர் மாற்றம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இடையேநடந்த தொலைபேசி உரையாடலை மனு வடிவில், தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்தார்.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. முதல்வரும், லட்சுமி பிரானேஷும் தங்களது பதவியை ராஜினாமாசெய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.
இந் நிலையில் ஜெயலலிதாவை தகுதி நீக்கம் செய்து உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல்செய்யப்பட்டது. தற்போது லட்சுமி பிரானேஷ் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி திமுக சார்பில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி இதுதொடர்பாக தாக்கல் செய்துள்ள மனுவில், ஆளுநர் மாற்றம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் லட்சுமி பிரானேஷ் தாக்கல் செய்துள்ள மனுவில், மத்திய அரசை விமர்சித்துள்ளார். மேலும், உள்துறைஅமைச்சரின் தொலைபேசி உரையாடலை உச்ச நீதிமன்றத்தில் வெளியிட்டுள்ளார்.
இதன் மூலம் மத்தியஆட்சிப் பணியாளர்களுக்கான சட்டத்தை அவர் மீறியுள்ளார். ஜெயலலிதாவின் தூண்டுதலின் பேரில்தலைமைச் செயலாளர் சட்டத்தை மீறி செயல்பட்டுள்ளார்.
அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் ஆற்காடுவீராசாமி கூறியுள்ளார்.
இந்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications