யுஏஇ அதிபர் மறைவு: கலாம் நேரில் அஞ்சலி
துபாய் & டெல்லி:
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளின் ஆட்சியாளரான, மன்னர் ஷேக் சையத் பின் சுல்தான் அல்-நஹ்யான் மரணமடைந்தார்.அவருக்கு வயது 86.
அவரது மறைவுக்கு இந்தியாவின் சார்பில் அஞ்சலியை ஜனாதிபதி அப்துல் கலாம், அபுதுபாய் செல்கிறார்.
சிறிது காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த ஷேக் சையத் நேற்றிரவு காலமானார். இதையடுத்து அவரது மகன் ஷேக் கலிபாபின் சையத் அல்-நஹ்யான் அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்.
யு.ஏ.இ. நாடுகளை ஆளும் 7 மன்னர் பரம்பரையினரும் 30 நாட்களுக்குள் கூடி, விவாதித்து அடுத்த ஜனாதிபதியாக இவரைத்தேர்வு செய்வர் என்று தெரிகிறது. அதுவரை துபாய் மன்னர் ஷேக் மஹ்தும் பின் ரஷீத் இடைக்கால அதிபராக செயல்படுவார்.
அபு துபாயின் தலைவராக இருந்து ஐக்கிய அரபு எமிரேட்சை ஆண்ட, மன்னர் ஷேக் சுல்தான் அந் நாட்டு மக்களால் மிகவும்விரும்பப்பட்ட தலைவராவார். வளைகுடா நாட்டு மன்னர்களிலேயே மக்களுக்கு மிக அதிக சுதந்திரம் வழங்கியவர் இவரே.
இவரது மறைவையடுத்து நாடு முழுவதும் 40 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. அடுத்த சில நாட்களுக்கு கல்விநிலையங்கள், அரசு அலுவலகங்கள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந் நாட்டின் மக்கள் தொகையில் 85 சதவீதம் பேர் அங்கு வேலை பார்க்கச் சென்ற வெளிநாட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.உலகின் 9 சதவீத பெட்ரோலிய ரிசர்வ் இந்த நாட்டில் உள்ளது. உலகின் செல்வச் செழிப்பு மிக்க நாடுகளில் இதுவும் ஒன்று.
மறைந்த அதிபருக்கு அஞ்சலி செலுத்த ஜனாதிபதி அப்துல் கலாம் இன்று அபுதுபாய் செல்கிறார். நாளை அவர் டெல்லிதிரும்புவார். கடந்த அக்டோபரில் கலாம் யுஏஇ சென்றிருந்தபோது மன்னர் உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்ததால் அவரை சந்திக்கஇயலவில்லை.
ஷேக் சையதின் மறைவுக்கு இந்தியா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. இந்தியாவின் நலனில் அக்கறை கொண்டிருந்தமாபெரும் அரேபியத் தலைவர் அவர் என இந்தியா கருத்து தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications